ETV Bharat / sports

ஐபிஎல் 2019: மும்பை பேட்டிங்! - டிவில்லியர்ஸ்

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

மும்பை பேட்டிங்
author img

By

Published : Mar 28, 2019, 8:04 PM IST

Updated : Mar 28, 2019, 8:36 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சற்றுமுன் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சென்னை அணிக்கு எதிராக விளையாடியே அதே 11 வீரர்களுடன் இன்றைய ஆட்டத்திலும் கோலி களமிறங்குகிறார்.

மறுமுனையில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அணியில் இரண்டு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். ஆல்ரவுண்டர் பென் கட்டிங், ரசிக் சலாம் ஆகியோருக்கு பதிலாக மயங்க் மார்கண்டே நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு அணிகளும் இந்த தொடரில் விளையாடிய தங்களது முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தன. இதனால் இன்று நடைபெறவுள்ள போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் எண்ணத்தில் விளையாடுவார்கள் என கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு - மும்பை அணிகள் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், மும்பை அணி 14 போட்டிகளிலும், பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதில், வேடிக்கை என்னவென்றால், பெங்களூரு அணி தனது சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் மும்பைக்கு எதிராக ஆடிய போட்டியில் மோசமான சாதனைப் படைத்துள்ளது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக ஆடிய 9 போட்டிகளில் பெங்களூரு வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால், சின்னசாமி மைதானம் யாருக்கு சொந்த மைதானம் என்றே தெரியவில்லை.

சின்னசாமி மைதானத்தில் மும்பை அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் செலுத்துமா அல்லது பெங்களூரு அணியின் கைகள் ஓங்குமா என்பது இன்றையப் போட்டியில் தெரிந்துவிடும்.

பெங்களூரு அணி விவரம்: கோலி, பார்திவ் பட்டேல், டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஹெட்மயர், ஷிவம் துபே, காலின் டி கிராண்ட்ஹொம், நவ்தீப் சைனி, சாஹல், உமேஷ் யாதவ், முகமது சீராஜ்

மும்பை அணி விவரம்: ரோஹித் ஷர்மா, டி காக், சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மிட்சல் மெக்லனகன், பும்ரா, மயங்க் மார்கண்டே, லசித் மலிங்கா

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 28, 2019, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.