ETV Bharat / sports

ரபாடாவுக்கு பதிலடி கொடுப்பாரா ரஸல் ; டெல்லி-கொல்கத்தா பலப்பரீட்சை!

கொல்கத்தா: ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் மோதுகிறது.

DC vs KKR
author img

By

Published : Apr 12, 2019, 1:03 PM IST

கொல்கத்தா ’ஈடன் கார்டன்’ மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இன்று மோதுகிறது.

இந்த இரு அணிகளும் மோதிய கடந்த போட்டி சூப்பர் ஓவர்வரை சென்று, ரபாடாவின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றிபெற்றது. இதனால் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு கொல்கத்தா பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த், ஷிகர் தவான் என இளம் வீரர்களுடன் உள்ளனர். ஆனால் கூட்டாக இணைந்து செயல்படுவதில் தவறிவருகின்றனர். டெல்லி அணி வெற்றி பெற ’பேபி சிட்டர்’ ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆட வேண்டும். பந்துவீச்சில் ரபாடா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

DC vs KKR
ரபாடா - ரஸல்

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லாத அணியாக வலம்வருகிறது. தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான கள வியூகத்தாலும், ரஸலின் பொறுப்பான அதிரடியாலும் அந்த அணி ஐபிஎல்லில் மற்ற அணிகளை மிரட்டிவருகிறது.

கடந்த போட்டியின் சூப்பர் ஓவரின்போது ரபாடா பந்தில் ஆட்டமிழந்ததற்கு ரஸல் இன்று தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, ஹார்ரி ஆகியோர் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்கக் கூடும்.

மேலும் கங்குலியின் சொந்த மண்ணில் டெல்லி அணி களமிறங்குவதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Intro:Body:

Dhoni wins 100th match in IPL

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.