உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களின் அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்து ட்விட்டரில் தனது தேர்தல் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து, உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளைத் கூறினார்.
சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜாவின் மனைவி பாஜகவிலும், ஜடேஜாவின் தந்தை மற்றும் சகோதரி காங்கிரசிலும் இணைந்தனர். தற்போது ஜடேஜா பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிரெதிர் கட்சிகளுக்கு ஆதரவளித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.