ETV Bharat / sports

'ஜெயிக்கிறோமோ இல்லயோ... சண்டை செய்யணும்...' - தல தோனியின் சாதனை!

author img

By

Published : Apr 22, 2019, 12:44 PM IST

Updated : Apr 22, 2019, 5:08 PM IST

ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை கேப்டன் தல தோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

தல தோனி

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. அதில் சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தல தோனியின் அதிரடியான ஆட்டத்தால் முதல் 5 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி பந்தை தவறவிட தாகூர் ரன் அவுட் செய்யப்பட்டு, ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி 48 பந்துகள் எதிர்கொண்டு 84 ரன்களை சேர்த்தார். அதில் 7 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளைப் படைத்தார்.

தல தோனி
தல தோனி

ஐபிஎல் தொடர்களில் தோனி இதுவரை, பஞ்சாப் அணிக்கு எதிராக எடுத்த 79 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியிருந்தது. இந்நிலையில் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது அதிகபட்ச ஸ்கோரை அவர் பதிவு செய்தார்.

மேலும், இந்தப் போட்டியில் 7 சிக்சர்களைப் பறக்கவிட்ட தோனி, ஐபிஎல் தொடர்களில் 200 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மொத்தமாக இதுவரை தோனி 203 சிக்சர்களுடன் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 323 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், 204 சிக்சர்களுடன் டி வில்லியர்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

தல தோனி
தல தோனி

மேலும், ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களையும் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் தோனியின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், இணையத்தில் அவரை கொண்டாடி வருகின்றனர். சென்னை அணி தோற்றதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் மிகச்சிறந்த ஆட்டம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Intro:Body:

Dhoni records First indian to hit 200 sixes in IPL

Conclusion:
Last Updated : Apr 22, 2019, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.