ETV Bharat / sports

பஞ்சாப் - டெல்லி இன்று பலப்பரீட்சை

மொகாலி: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது.

பஞ்சாப் - டெல்லி இன்று பலப்பரீட்சை
author img

By

Published : Apr 1, 2019, 3:31 PM IST

மொகாலியில் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த தொடரில் இவ்விரு அணிகளும் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளனர்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றிபெற்றது. குறிப்பாக, சூப்பர் ஓவரில் ரஸலை கட்டுப்படுத்திய ராபாடா, இன்றையப் போட்டியில் கெயிலை சமாளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதே சமயம், பஞ்சாப் அணியில் ஆன்ட்ரூவ் டை, ஹர்துஸ் வில்ஜோயன், முருகன் அஷ்வின், ஆகியோர் பந்துவீச்சில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்களது பந்துவீச்சை பிரித்விஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும், டெல்லி அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இவ்விரு அணிகள் மோதும் இந்தப் போட்டி மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.