ETV Bharat / sports

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை 155 ரன்கள் குவிப்பு! - பிராவோ

சென்னை: சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது.

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை 155 ரன்கள் குவிப்பு!
author img

By

Published : Apr 26, 2019, 10:15 PM IST

12வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 44வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரெய்னா முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, மும்பை அணியில் ரோஹித் ஷர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டி காக் 15 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த இவின் லிவிஸுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்களை சேர்த்த நிலையில், இவின் லிவிஸ் சான்ட்னர் பந்துவீச்சில் 32 ரன்களுடன் பெவிலியன் திரும்பியனர். அவரைத்தொடர்ந்து வந்த குருணால் பாண்டியா 1 ரன்னுடன் தாஹிரின் பந்துவீச்சில் நடையைக் கட்ட மும்பை அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த 101 ரன்களை எடுத்திருந்தது.

Rohit sharma
ரோஹித் ஷர்மா

இதனிடையே, இப்போட்டியில் நேர்த்தியாக பேட்டிங் செய்த ரோஹித் ஷர்மா 67 ரன்களுடன் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா - பொலார்ட் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, பிராவோ வீசிய கடைசி ஓவரில் இந்த இணை 17 ரன்களை சேர்த்தது. இதனால், மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.

Santner
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் சான்ட்னர்

12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி, அடுத்த 8 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னரின் அற்புதுமான பந்துவீச்சால் மும்பை அணி மிடில் ஆர்டர் பிரிவில் ரன் குவிக்கத் திணறினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.