ETV Bharat / sports

சின்னதல பேக் டூ ஃபார்ம்; சென்னை வெற்றி!

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

author img

By

Published : Apr 14, 2019, 8:09 PM IST

சின்னதல

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்துருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 82 ரன்கள் அடித்தார். சென்னை அணி சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 162 ரன் இலக்குடன் ஆடிய சென்னை அணியில் வாட்சனுடன் சேர்ந்து டு பிளசிஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ரஸல் வீசிய இரண்டாவது ஓவரில் டு பிளசிஸ் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை அடித்தார். ஆனால், மறுமுனையில் இருந்த வாட்சன் 6 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய டு பிளசிஸ் 24, ராயுடு 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் வந்த கேதர் ஜாதவ் 20 ரன்களில் நடையைக் கட்ட ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி - ரெய்னா இணை சிறப்பாக ஆடியது. இவ்விரு வீரர்களும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 40 ரன்களை சேர்த்த நிலையில், தோனி 16 ரன்களில் அவுட். இதனால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை அடித்திருந்ததால், வெற்றிக்கு 26 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டது.

தோனி ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்திய ரெய்னா இந்தத் தொடரில் தனது முதல் அரைசதம் விளாசினார். அதேசமயம் ஜடேஜாவும் சற்று அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டு பவுண்டரிகளை அடித்தார். இதனால், சென்னை அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தாக வேண்டிய நிலையில், பூயிஷ் சாவ்லா வீசிய அந்த ஓவரின் நான்கு பந்துகளில் ஜடேஜா ஆட்டத்தை முடித்தார்.

இதன் மூலம் சென்னை அணி இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன் இந்தத் தொடரில் ஆடிய 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.