ETV Bharat / sports

ஜனநாயகக் கடமையாற்றிய கிரிக்கெட் வீரர் புஜாரா! - கிரிக்கெட் வீரர் புஜாரா

ராஜ்கோட்: மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

புஜாரா
author img

By

Published : Apr 23, 2019, 12:22 PM IST

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கேரளா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநில மக்களவைத் தேர்தலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா தனது குடும்பத்துடன் ராஜ்கோட் தொகுதியில் வாக்கினைப் பதிவு செய்தார்.

இன்று நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. சென்னை அணியின் ஜடேஜா, மும்பை அணியின் பாண்ட்யா சகோதரர்கள், பும்ரா மற்றும் பெங்களூரு அணியின் பார்த்திவ் படேல் ஆகியோர் வாக்களிக்க இதுவரை வரவில்லை.

இதுகுறித்து பாண்ட்யா சகோதரர்களின் தந்தை பேசுகையில், "ஐபிஎல் தொடரில் ஆடிவருவதால் வாக்களிக்க வரமாட்டார்கள்" என தெரிவித்தார்.

தேர்தல் விளம்பரத் தூதர்களாக செயல்பட்டு வரும் கிரிக்கெட் வீரர்களே தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்காதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தமிழக வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜெகதீசன் ஆகியோர் வாக்களிக்க வராதது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Tajinder singh bags gold medal in shotput

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.