ETV Bharat / sports

150 விக்கெட்டுகளை வீழ்த்திய அமித் மிஸ்ரா!

author img

By

Published : Apr 18, 2019, 10:05 PM IST

டெல்லி : ஐபிஎல் தொடர்களில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை டெல்லி வீரர் அமித் மிஸ்ரா படைத்துள்ளார்.

அமித் மிஸ்ரா

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 34ஆவது லீக் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் விளையாடின. இப்போட்டியின்போது டெல்லி அணி சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா வீசிய பந்தில் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா போல்டாகி வெளியேறினார்.

இந்த விக்கெட்டோடு ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதுவரை 140 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மிஸ்ரா உள்ளார். மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா 154 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

அமித் மிஸ்ரா ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

150th wicket for amit mishra in IPL

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.