சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை,வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. இதனால், இறுதிப்போட்டிக்கு முடிவை அறிய ஆறாவது நாளான (ரிசர்வ் டே) இன்றும் (ஜுன் 23) விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
கோலியும் ஜேமீசனும்
இன்றைய ஆட்டத்தை புஜாரா 12 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் தொடங்கினர். விராட் கோலி நேற்று கடைசி நேரத்தில் கோலியிடம் தென்பட்ட ஆக்ரோஷம் இன்று அவரிடம் தென்படவில்லை.
-
Virat Kohli 🤝 BJ Watling
— ICC (@ICC) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A nice gesture from the Indian skipper congratulating the @BLACKCAPS wicket-keeper on the final day of his international career 🙌#WTC21 Final | #INDvNZ | #SpiritOfCricket pic.twitter.com/zcI47UFPAp
">Virat Kohli 🤝 BJ Watling
— ICC (@ICC) June 23, 2021
A nice gesture from the Indian skipper congratulating the @BLACKCAPS wicket-keeper on the final day of his international career 🙌#WTC21 Final | #INDvNZ | #SpiritOfCricket pic.twitter.com/zcI47UFPApVirat Kohli 🤝 BJ Watling
— ICC (@ICC) June 23, 2021
A nice gesture from the Indian skipper congratulating the @BLACKCAPS wicket-keeper on the final day of his international career 🙌#WTC21 Final | #INDvNZ | #SpiritOfCricket pic.twitter.com/zcI47UFPAp
கோலி தடுமாறுவதைக் கண்ட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஜேமீசனை பயன்படுத்திக்கொண்டே இருந்தார். அதன்படி, ஜேமீசன் - வில்லியம்சன் கூட்டணி விரித்த வலையில் கோலி சிக்கினார்.
கோலியும் ஜேமீசனும் மோதியுள்ள ஆறு இன்னிங்ஸ்களில், இந்த விக்கெட்டை சேர்த்து மூன்றாவது முறையாக கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் ஜேமீசன்.
திணறும் மிடில்
ஜேமீசனின் அந்த எக்ஸ்டரா பவுன்ஸ் பந்தை கடைசி நேரத்தில் தட்டிவிட முயன்ற கோலி, வாட்லிங் கையில் கேட்ச் கொடுத்து 13 (29) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
Make that two for Jamieson! Pujara now. Edges one to Taylor at 1st slip. India now 72/4 and 40 runs ahead as Pant joins Rahane 0* at the Hampshire Bowl. Follow play LIVE in NZ with @skysportnz with highlights on @sparknzsport. Card | https://t.co/9M1mvODiZ3 #WTC21 pic.twitter.com/C1XgAPY2Os
— BLACKCAPS (@BLACKCAPS) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Make that two for Jamieson! Pujara now. Edges one to Taylor at 1st slip. India now 72/4 and 40 runs ahead as Pant joins Rahane 0* at the Hampshire Bowl. Follow play LIVE in NZ with @skysportnz with highlights on @sparknzsport. Card | https://t.co/9M1mvODiZ3 #WTC21 pic.twitter.com/C1XgAPY2Os
— BLACKCAPS (@BLACKCAPS) June 23, 2021Make that two for Jamieson! Pujara now. Edges one to Taylor at 1st slip. India now 72/4 and 40 runs ahead as Pant joins Rahane 0* at the Hampshire Bowl. Follow play LIVE in NZ with @skysportnz with highlights on @sparknzsport. Card | https://t.co/9M1mvODiZ3 #WTC21 pic.twitter.com/C1XgAPY2Os
— BLACKCAPS (@BLACKCAPS) June 23, 2021
இதன்பின், ஜேமீசன் வீசிய அவரின் அடுத்த ஓவரில் புஜாராவும் 15(80) ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். கடைசிவரை நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட துணைக் கேப்டன் ரஹானே 15 (40) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
காப்பாற்றப்படுமா இந்தியா?
இதையடுத்து ஜோடி சேர்ந்த பந்த் - ஜடேஜா ஆகிய இரண்டு இடதுகை ஜோடி, ஆட்டத்தை ஒருநாள் போட்டியைப் போன்று விளையாட தொடங்கியுள்ளது.
வாக்னர் ஓவரில் இரண்டு, மூன்று என ஓடுவது, போல்ட் ஓவரில் தடுப்பாட்டத்தை கையிலெடுப்பது என அணியின் ஸ்கோரை அதிகப்படுத்த முயன்று வருகின்றனர்.
-
Lunch in Southampton 🍲
— ICC (@ICC) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A potential thriller awaits...#WTC21 Final | #INDvNZ | https://t.co/HNwett21vH pic.twitter.com/uRWXUre5ch
">Lunch in Southampton 🍲
— ICC (@ICC) June 23, 2021
A potential thriller awaits...#WTC21 Final | #INDvNZ | https://t.co/HNwett21vH pic.twitter.com/uRWXUre5chLunch in Southampton 🍲
— ICC (@ICC) June 23, 2021
A potential thriller awaits...#WTC21 Final | #INDvNZ | https://t.co/HNwett21vH pic.twitter.com/uRWXUre5ch
இந்நிலையில், ஆறாம் நாள் (ரிசர்வ் டே) ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு முன்வரை, இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 28(48) ரன்களுடனும், ஜடேஜா 12(20) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது இந்திய அணி நியூசிலாந்தை விட 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
டிராவா இல்லை கோப்பையா
இன்னும் முழுவதுமாக இரண்டு செஷன்களும், 5 விக்கெட்டும் கையில் இருப்பதால் இந்தியா ஆட்டத்தை டிரா செய்து, சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ளுமா அல்லது சாம்பியன் பட்டத்தை தனதாக்க, அதிரடி ஆட்டத்தை விளையாட ஆரம்பிக்குமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
முதல் செஷன் நிலவரம்: இந்தியா 25 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழந்து 66 ரன்கள் குவிப்பு
இதையும் படிங்க: WTC FINAL: முதல் செஷன்தான் முக்கியம் - சச்சின்