ETV Bharat / sports

SA vs IND 2nd Test: இந்தியா படுதோல்வி; தொடர் சமன் - Wanderers Stadium

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

SA vs IND 2nd Test
SA vs IND 2nd Test
author img

By

Published : Jan 7, 2022, 7:36 AM IST

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக விளங்கிய செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே டெஸ்ட்) இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸ்

இதையடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி, முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 202 ரன்களை எடுத்தது. அடுத்த பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 229 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

வலுவான தென்னாப்பிரிக்கா

27 ரன்கள் பின்தங்கிய நிலையில், களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ராகுல், அகர்வால் பெரிதும் ஏமாற்றத்தை அளித்தனர். இதனால், புஜாரா - ரஹானே ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருவரும் அரைசதம் கடந்த பின்னர் ஆட்டமிழக்க, இந்திய அணி 266 ரன்களை எடுத்து, 239 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறைவுசெய்தது. தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு ரபாடா, இங்கிடி, ஓலிவர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மூன்றாம் நாளின் இரண்டாவது செஷனிலேயே இந்தியா ஆல்-அவுட்டாக, முழுதாக இரண்டரை நாள்கள் கையிலிருக்க 240 ரன்களுடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. மூன்றாவது நாளின் 40 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா, 2 விக்கெட்டுகளை 118 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

மழையால் 2 செஷன்கள் ரத்து

இந்தியா வெற்றிபெற 8 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டியிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றைய (ஜனவரி 6) நான்காம் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை தொடர் பெய்துவந்ததால் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டு செஷன்கள் வரை ஒரு பந்துகூட வீசப்படாமல் முழுதும் ரத்தானது.

மூன்றாவது செஷனில் மழை கொஞ்சம் மனது வைக்க ஆட்டம் மீண்டும் தொடங்கியது. கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களுடனும், ரஸ்ஸி வான் டேர் டஸ்ஸன் 11 ரன்களுடனும் பேட்டிங்கைத் தொடங்கினர்.

இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும், இருவரின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. எல்கர் அரைசதம் கடந்து சதம் நோக்கி சீறி கொண்டிருக்க, டஸ்ஸன் 40 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆட்டநாயகன் எல்கர்

அடுத்து வந்த பவுமாவும், எல்கருக்கு பக்கபலமாக நின்று ஆட தென்னாப்பிரிக்கா 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன்மூலம், இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எலகர் 96 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அணயின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, கேப்-டவுன் நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிங்க: நோவாக் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.