ETV Bharat / sports

SA vs IND: முதல் நாளில் இந்தியா ஆல்-அவுட்; ராகுல், அஸ்வின் ஆறுதல் - கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், இந்தியா 202 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 167 ரன்கள் பின்தங்கியுள்ளது.

SA vs IND 2nd Test Day 1 Scorecard, Ashwin, KL Rahul, அஸ்வின், ராகுல்
SA vs IND 2nd Test Day 1 Scorecard
author img

By

Published : Jan 4, 2022, 7:26 AM IST

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக விளங்கிய செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே டெஸ்ட்) இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது.

கோலி விலகல்

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க், வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.3) தொடங்கியது. முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி இப்போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார்.

தென்னாப்பிரிக்கா அணியில் டி காக் திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றதால் விக்கெட் கீப்பராக அறிமுக வீரர் கையில் வெரியைன் களமிறக்கப்பட்டார். முல்டர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் ஓலிவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுமாரான தொடக்கம்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. தொடக்க வீரர்களாக ராகுல், மயாங்க் அகர்வால் ஜோடி களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 36 ரன்களை சேர்த்தபோது, அகர்வால் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்த வந்த அனுபவ வீரர்களான புஜாரா 3 ரன்களிலும், ரஹானே ரன் ஏதும் இன்றியும் வெளியேறினர். இதனால், மதிய உணவு இடைவேளை முன்னர்வரை, இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்களை எடுத்தது.

உணவு இடைவேளைக்கு பின்னர், ராகுல், விஹாரி ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 பந்துகளை கடந்த விஹாரி, 20 ரன்களில் ரபாடாவிடம் வீழ்ந்தார். அரைசதம் அடித்த ஐந்து பந்துகளில் கேப்டன் ராகுல் ஜேன்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அஸ்வின் அசத்தல்

தேநீர் இடைவேளை வரை இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 13 ரன்களுடனும், அஸ்வின் 24 ரன்களுடனும் அப்போது களத்தில் இருந்தனர். இடைவேளைக்கு பின்னர், அடுத்தடுத்து ரிஷப் பந்த் 17, ஷர்துல் 0, முகமது ஷமி 9 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஆனால், மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய அஸ்வின் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பும்ரா - சிராஜ் ஜோடி சிறிது ஓவர்களுக்கு தாக்குப்பிடித்த நிலையில், இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், ரபாடா, ஓலிவர் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

காயமடைந்த சிராஜ்

இதையடுத்து, தனது பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு கேப்டன் டீன் எல்கர், மார்க்ரம் ஆகியோர் ஓப்பனர்களாக களம் கண்டனர். பும்ரா - ஷமி ஆகியோர் சிறப்பான முதல் ஸ்பெல்லை வீசினர். மார்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்தது. அந்த அணி 167 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், எல்கர் 11 ரன்களுடனும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும், சிராஜ் தனது நான்காவது ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது, வலதுகாலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடைசி பந்தை வீசாமல் பெவிலியன் திரும்பினார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரால் இன்று பந்துவீச இயலுமா என்பது கேள்விக்குறியே. இருப்பினும், சிராஜ் பந்து வீசுவார் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.

இதையும் படிங்க: விராத் கோலி விலகல், பும்ரா துணை கேப்டன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.