இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே ரோகித் சா்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினாா். அவருக்குப் பதிலாக பிரியங்க் பாஞ்சல் சேர்ந்துள்ளார். இருப்பினும் துணை கேப்டன் நியமனம் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா