ETV Bharat / sports

கோலி vs கேன்; முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்? - Tamilnews

'ஐபிஎல் லெவலுக்கு பில்டப் கூடுக்குறாங்கப்பா' என இன்றைய சிறுவர்கள் இந்தொடர் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதுக்கும் மேல என்பதுதான் டெஸ்ட் வெறியர்களின் வெளிப்பாடு.

India Vs England
India Vs England
author img

By

Published : Jun 17, 2021, 8:07 PM IST

Updated : Jun 18, 2021, 7:07 AM IST

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, ஐசிசி டி20 உலகக்கோப்பை வரிசையில் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த இரண்டாண்டு காலமாக நடைபெற்று வந்தது. வங்கதேசம், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா என 9 நாடுகள் இம்மாபெரும் தொடரில் பங்கேற்றன.

இந்த தொடர்தான் முதல் தொடர் என்பதால், இதை வெல்லும்பட்சத்தில் கிரிக்கெட்டின் நீண்ட வரலாற்றில் ஒரு பெரும்பக்கத்தை தன்வசமாக்கிக் கொள்ளலாம் என்பதே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் ஆசையாக இருந்தது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என கிரிக்கெட் உலக பூர்வடிகள் இந்த கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று கங்கணம்கட்டிக் கொண்டு அலைந்தற்கான காரணமும் இத்தொடரை கைப்பற்றுவதினால் கிடைக்கப்போகும் மிகப்பெரும் கௌரவம்தான்.

இது அதுக்கும் மேல

'ஐபிஎல் லெவலுக்கு பில்டப் கூடுக்குறாங்கப்பா' என இன்றைய சிறுவர்கள் இந்தொடர் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதுக்கும் மேல என்பதுதான் டெஸ்ட் வெறியர்களின் வெளிப்பாடு.

BLUE vs BLACK

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்று கடந்த மார்ச் மாதமே உறுதியாகிவிட்டது. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி என அனைத்து ஐசிசி முன்னணி தொடர்களையும் வென்றிருக்கும் இந்திய அணியும், ஒரு சாம்பியன்ஸ் டிராபியை (2000-01) தொடரை மட்டும் வென்றுள்ள நியூசிலாந்து அணியும்தான் இறுதிப்போட்டியைச் சந்திக்கின்றன.

  • 🔹 Physical abilities
    🔹 Mental abilities
    🔹 Concentration
    🔹 Teamwork

    Legends highlight the qualities of Test cricket ahead of the #WTC21 Final between India and New Zealand 📽️ pic.twitter.com/QhAbizLc9e

    — ICC (@ICC) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இரண்டு நாள்களுக்கு முன் இரு அணிகளும் தங்களின் 15பேர் கொண்ட ஸ்குவாடை அறிவித்தன. அதிலிருந்து ஆரம்பமாகிவிட்டது ரசிகர்களின் கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும்.

வில்லன் வில்லியம்சன்

2015 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணி, அடுத்தடுத்த வருடங்களில் வேறு உருவத்தை பெற ஆரம்பித்தது. கேன் வில்லியம்சனின் நேர்த்தியான கேப்டன்சி, உள்நாட்டில் தோல்வியுறாதது, பலமான இடது-வலது வேகப்பந்துவீச்சு என பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, 2019 உலகக்கோப்பையிலும் மிரட்டும் சக்தியாக நியூசிலாந்து அணி உருவெடுத்தது.

இதில் கேன் வில்லியம்சனின் பங்கு மிகப்பெரிது. தன்னுடைய பேட்டிங்கால் மட்டுமில்லாமல், களத்தில் கேப்டனாகவும் பல பங்களிப்பை நியூசிலாந்து அணிக்கு அளித்திருக்கிறார். 2020இல் டெஸ்டில் நம்பர்-1 அணியாக, இந்தியா அசுரப் பலத்துடன் நியூசிலாந்தில் மண்ணில் காலடி எடுத்து வைத்தது.

அப்போது நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியாவை 0-2 என்ற கணக்கில் வீழ்த்தியது வில்லியம்சன் குழு. அதன்பின் நடந்த பாகிஸ்தான், மேற்கு இந்திய திவுகள் அணிகளுக்கு எதிரான தொடரையும் அசால்டாக வென்றனர் நியூசி வீரர்கள். இதனால்தான் உள்நாட்டில் அசைக்கமுடியாத அணியாக கருந்தோப்பிகள் (நியூசிலாந்து) மாறினார்கள்

உள்நாட்டு போட்டிகளில் எல்லாம் இரட்டை சதம், தொடர் சதங்கள் என ரன்களை குவித்துவந்த கேன், வெளிநாடுகளில் பவ்வியமான ஆட்டத்தையே தற்போது வெளிப்படுத்திவருகிறார். இருப்பினும், உலகத்தர பேட்ஸ்மேனான அவரின் விக்கெட்டை எடுப்பதுதான் கோலி&கோ-விற்கு மிகுந்த தலைவியை தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கோலி-னா சும்மாவா

ரெண்டு வருசமாச்சு, கோலியோட சென்சூரியைப் பார்த்து என ரசிகர்கள் குமுறிக்கொண்டிருக்கின்றனர். நவம்பர் 2019 பிறகு டெஸ்டில் ஒரு சதத்தைக் கூட, கேப்டன் கோலியால் பதிவுச்செய்ய முடியவில்லை. சென்ற ஆண்டு பெரும்பான்மை போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும், 2020 நியூசிலாந்து தொடர், 2021 இங்கிலாந்து தொடர் என முக்கியப் போட்டிகள் எதிலும் அவர் சதத்தை நெருங்கவேயில்லை.

இது அணிக்கு பெரும் இழப்பு என்றாலும், அணியின் பேட்டிங் கோலியைச் சார்ந்து இருக்கவில்லை என்பது சற்று நிம்மதி. பவுல்ட், சவுத்தி ஆகியோரின் டீப் இன்-ஸ்விங் டெலிவரியை கோலி எப்படி சமாளித்து, தன்னுடைய கேப்டன் இன்னிங்ஸை ஆடப் போகிறார் என்பதைதான் பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சலைக்காத பேட்டிங் வரிசை

வில்லியம்சன், டெய்லர், கான்வே, லேத்தம், ப்ளன்டேல், பிஜே வாட்லிங், நிக்கோலஸ் என வெயிட்டான முன்வரிசை பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து வைத்திருந்தாலும், ஜேமீசன், வாக்னர் போன்ற பந்துவீச்சாளர்கள் கூட நிலைத்துநின்று ஆடுவார்கள் என்பது 'கிவிஸ்'-இன் (kiwis) சிறப்பு.

அதிலும் வாக்னர், சென்ற வாரம் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடித்த அத்தனை ஷாட்டுகளும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

நாங்களும் வச்சுருக்கோம்

இந்திய தரப்பில் பார்த்தோமானால் கடைசிவரிசை வீரர்கள் பேட்டிங்கிற்கு பங்களிப்பு அளிப்பது கடினம் என்றாலும், அஸ்வின், ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் திறன்வாய்ந்த பேட்ஸ்மேன்கள் என்பது அணிக்கு பெரும் ப்ளஸ்

இவர்களை தவிர்த்து ரோஹித், கோலி, புஜாரா, ரஹானே, பந்த், விஹாரி என அடியாழம் வரை பேட்ஸ்மேன்களை அடுக்கிவைத்துள்ளது இந்தியா. இங்கிலாந்து சூழலில் நியூசிலாந்தின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி தாக்குப்பிடிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒண்ணு இருக்கு, மிச்ச ரெண்டு...

இந்திய அணியின் முழுநேர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினின் இடம் அணியில் அசைக்க முடியாதது. அதேபோல் ஆல்ரவுண்டர் என்ற முறையில் ஜடஜோவுக்கு இடம் நிரந்தரம்தான். ஆக, மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் எனும்போது பும்ரா, இஷாந்த், ஷமி, சிராஜ், உமேஷ் இதில் யார் விளையாடுவர்கள் என்பதே பெரும் விவாதமாக உள்ளது.

பும்ராவின் தொடக்க ஓவர்கள் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. உமேஷ் யாதவ் தற்போதைய சூழலில் பெரிதாக சோபிக்கவில்லை என்பதால் அவரை அணியில் சேர்ப்பதும் கேள்விக்குறிதான். இப்படியிருக்க அனுபவ வீரர் இஷாந்த், ஸகெண்ட் இன்னிங்ஸ் ஸ்பெசலிஸ்ட் ஷமி, துடிப்பான இளம் வீரர் சிராஜ் என இவர்களுக்குள்தான் பெரும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

யார் அணியில் இடம்பெற்றாலும், நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று அவர்களின் இறுதிவரிசை வீரர்களை விரைவாக வெளியேற்றவதும் அவசியம். அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்துக்கு எதிராக டியூக்ஸ் பந்தில் (DUKES BALL) பந்துவீசப்போவதும் பெரும் சவால்தான்.

நியூசிக்கு நோ பிராப்ளம்

டிம் சவுத்தி, போல்ட், ஜேமீசன், வாக்னர் என பந்துவீச்சு வரிசையை பலமாக வைத்துள்ளது நியூசி. இதில் உதிரியாக காலின் டி கிராண்ட்ஹோமா இல்லை ஆஜாஸ் பட்டேலா என்பதுதான் கேள்வி. ரோஹித்திற்கு வாக்னர்; கோலி, புஜாராவுக்கு ஜேமீசன், போல்ட் என ஒவ்வொரு குதிரையையும் சாய்க்க, எதிரில் பெரும் சிப்பாய் படையே நிற்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

2020இல் இந்திய டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜேமீசனுக்கு, முதல் இரண்டு ஃபோனி புஜாராவும், கோலியும்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வருவாரா வருண்?

இறுதிப்போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் தற்போது, கடுமையாக மழை பெய்துவருகிறது. போட்டி நடைபெறும் நாள்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருக்கும்பட்சத்தில், அது நியூசிலாந்திற்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

நீண்டநாள் கழித்து ஒரு பெரிய மோதலை காண கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருப்பதால், மழை குறித்து ரசிகர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் அதை ஈடுகட்ட ஜூன் 23ஆம் தேதியை 'ரிசர்வ் டே'-ஆக ஐசிசி அறிவித்துள்ளது.

நாளை (ஜூன் 18) இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருக்கிறது.

இந்தியா பிளேயிங் லெவன்: விராட் கோலி(கேப்டன்), அஜிங்கயா ரஹானே (துணை கேப்டன்) ரோஹித் சர்மா, சுப்மன் கில், சத்தேஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி,

நியூசிலாந்து உத்தேச அணி: கேன் வில்லியம்சன் (சி), ட்ரெண்ட் போல்ட், டெவன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமீசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங், வில் யங்

இதையும் படிங்க: ENG VS NZ: 22 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து!

Last Updated : Jun 18, 2021, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.