நாட்டிங்காம் (இந்தியா): இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று (ஆக.5) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணி மதிய இடைவேளை வரை 61/2 என்ற நிலையில் இருந்தது.
சரிந்த மிடில் ஆர்டர்
இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, சிறிது நேரத்திலேயே தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. 70 பந்துகளை சந்தித்த சிப்லி 18 ரன்களை எடுத்தபோது முகமது ஷமியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஷமி பந்துவீச்சில் தொடர்ந்து பேர்ஸ்டோவ் 29 ரன்களுடனும், டான் லாரன்ஸ் ரன்னேதும் இன்றியும் ஆட்டமிழந்து வெளியேறினர். நட்சத்திர பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரும் பும்ரா பந்துவீச்சில் டக்-அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
ரூட் அவுட்; இங்கிலாந்தும் அவுட்
-
Stellar bowling performance from #TeamIndia bowlers as England is bowled out for 183.
— BCCI (@BCCI) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/HuWiTj0biJ
">Stellar bowling performance from #TeamIndia bowlers as England is bowled out for 183.
— BCCI (@BCCI) August 4, 2021
Scorecard - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/HuWiTj0biJStellar bowling performance from #TeamIndia bowlers as England is bowled out for 183.
— BCCI (@BCCI) August 4, 2021
Scorecard - https://t.co/TrX6JMiei2 #ENGvIND pic.twitter.com/HuWiTj0biJ
நீண்ட நேரமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபியூ முறையில் வெளியேற, ராபின்சன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் (65.2 ஓவர்கள்) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. சாம் கரன் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய இன்னிங்ஸ்
இந்திய பந்துவீச்சு தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி, தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Tokyo Olympics 14ஆவது நாள் அட்டவணை: இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது?