ETV Bharat / sports

TOSS: இங்கிலாந்து பந்துவீச்சு; அணிக்கு திரும்பினர் ஷர்துல், உமேஷ்! - CHRIS WOAKES

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, இஷாந்த் ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

virat, ror, toss, joe root, virat kholi
virat, ror, toss, joe root, virat kholi
author img

By

Published : Sep 2, 2021, 3:34 PM IST

லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் (செப். 2) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

அஸ்வினுக்கு மீண்டும் 'நோ'

இந்திய அணி சார்பில் ஷமி, இஷாந்த் ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியிலும், முதல் தர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லருக்கு பதிலாக சாம் கரன், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு மாற்றாக ஒலி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

  • We will bowl first in the fourth Test! 🦁

    🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 #ENGvIND 🇮🇳

    — England Cricket (@englandcricket) September 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிளேயிங் XI

இங்கிலாந்து அணி: ரோரி ஜோசப் பர்ன்ஸ், டேவிட் மாலன், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஒலி போப், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ராபின்சன், ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணி: ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இதையும் படிங்க: THE OVAL TEST: அஸ்வின் எனும் துருப்புச் சீட்டை பயன்படுத்துவாரா கோலி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.