லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஆக. 12) தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில், இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 129, ரோஹித் 83, விராட் கோலி 42, ஜடேஜா 40, ரிஷப் பந்த் 37 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளையும், ராபின்சன், மார்க் வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ரூட், பேர்ஸ்டோவ் அரைசதம்
நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் இன்றைய (ஆக. 14) மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இரண்டாவது ஓவரிலேயே அரை சதத்தை கடந்த ஜோ ரூட், இந்த தொடரில் தான் விளையாடி மூன்று இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து மிரட்டியுள்ளார். பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ் என வேகக்கூட்டணி எவ்வளவு முயன்றும் இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை. ஜடேஜாவின் சுழலும் எடுபடவில்லை.
மதிய உணவு இடைவேளை
ஜோ ரூட் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்க, பேர்ஸ்டோவ் தனது 23ஆவது டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோவ் 19 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அரை சதம் அடித்திருப்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்கு முன்னர்வரை (73 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 89 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
-
England have added 97 runs to their overnight score without losing a wicket 🙌
— ICC (@ICC) August 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can India make a comeback in the second session?#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/W7sOd6jCpj
">England have added 97 runs to their overnight score without losing a wicket 🙌
— ICC (@ICC) August 14, 2021
Can India make a comeback in the second session?#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/W7sOd6jCpjEngland have added 97 runs to their overnight score without losing a wicket 🙌
— ICC (@ICC) August 14, 2021
Can India make a comeback in the second session?#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/W7sOd6jCpj
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர், கேப்டன் ஜோ ரூட் சதத்தை நோக்கி நிதானமாக சென்றுகொண்டிருந்தார். மறுமுனையில், நிலைத்து நின்று ஆடிவந்த பேர்ஸ்டோவ் 57 ரன்களில் சிராஜிடம் வீழ்ந்தார்.
பட்லர் போல்ட்
அதன்பின்னர், ஜாஸ் பட்லர் ஆறாவது வீரராக களமிறங்கினார். பும்ரா வீசிய 82ஆவது ஓவரில் ரூட் ஒரு ரன் எடுத்ததன் மூலம், டெஸ்ட் அரங்கில் தனது 22 சதத்தை பதிவு செய்தார். இந்த சதம் நடப்பாண்டில் ரூட் அடித்த ஐந்தாவது சதம் என்பது குறிப்பிடதக்கது.
-
Ishant Sharma finally strikes 💥
— ICC (@ICC) August 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jos Buttler departs for 23 and England are 283/5, still 81 runs behind India.#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/xKUXaTRp9m
">Ishant Sharma finally strikes 💥
— ICC (@ICC) August 14, 2021
Jos Buttler departs for 23 and England are 283/5, still 81 runs behind India.#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/xKUXaTRp9mIshant Sharma finally strikes 💥
— ICC (@ICC) August 14, 2021
Jos Buttler departs for 23 and England are 283/5, still 81 runs behind India.#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/xKUXaTRp9m
ரூட்டை வீழ்த்த விராட் மேற்கொண்ட அனைத்து வியூகங்களும் தகர்ந்துகொண்டிருந்த நேரத்தில், சற்று ஆறுதலாக இஷாந்த சர்மாவின் அசத்தலான் இன்-ஸ்விங் பந்தில் பட்லர் போல்டாகி வெளியேறினார். பட்லர் நான்கு பவுண்டரிகள் உள்பட 23 ரன்களைச் சேர்த்திருந்தார்.
தேநீர் இடைவேளை
இதன்பின் களமிறங்கிய மொயின் அலியும், கேப்டன் ரூட் உடன் சேர்ந்து சீராக ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில், தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட இரண்டாம் செஷன் நிறைவுபெற்றது.
தேநீர் இடைவேளை முன்னர்வரை (98 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணி 50 ரன்கள் இந்திய அணியை விட பின்தங்கியுள்ளது.
-
England are just 50 runs behind heading into tea ☕
— ICC (@ICC) August 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Joe Root (132*) is still at the crease and has Moeen Ali (20*) for company. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/Cf3PsTDIvz
">England are just 50 runs behind heading into tea ☕
— ICC (@ICC) August 14, 2021
Joe Root (132*) is still at the crease and has Moeen Ali (20*) for company. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/Cf3PsTDIvzEngland are just 50 runs behind heading into tea ☕
— ICC (@ICC) August 14, 2021
Joe Root (132*) is still at the crease and has Moeen Ali (20*) for company. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/Cf3PsTDIvz
ரூட் 132 ரன்களுடனும், மொயின் அலி 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
முதல் செஷன்: இங்கிலாந்து அணி - 28 ஓவர்கள் - 97/0
இரண்டாவது செஷன்: இங்கிலாந்து அணி - 25 ஓவர்கள் - 98/2
இதையும் படிங்க: 103 டிகிரி காய்ச்சலில் நீரஜ் சோப்ரா; கரோனா பாதிப்பா?