ETV Bharat / sports

பாக். கேப்டன் பாபர் அஸாம் மீது பாலியல் புகார்...! - பாபர் அஸாம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அஸாம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

babar-azam-accused-of-sexual-abuse-by-pakistani-woman

author img

By

Published : Nov 29, 2020, 12:10 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு சமீபத்தில் பாபர் அஸாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தற்போது நியூசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் பாபர் அஸாம் உள்ளார்.

இந்தநிலையில் அவர் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி அந்தப் பெண் கூறுகையில், '' பாபர் அஸாம் கிரிக்கெட்டராக இல்லாமல் இருந்தபோதே நாங்கள் காதலித்து வந்தோம். நாங்கள் ஒரே பள்ளியில் படித்ததோடு, ஒரு பகுதியில்தான் வசித்தோம். 2010ஆம் ஆண்டு அவர் என்னிடம் காதலை சொன்னார். நான் ஏற்றுக்கொண்ட பின், இருவரும் காதலித்து வந்தோம்.

வருடங்கள் கடந்தபோது, நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தோம். இதைப்பற்றி எங்கள் குடும்பத்தில் தெரியப்படுத்தியபோது, அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து 2011ஆம் ஆண்டு நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறினோம். அவர் என்னிடம் நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்வோம் என்றார். ஏராளமான வாடகை வீடுகளில் தங்கினோம். ஆனால் திருமணம் செய்வதை தொடர்ந்து தவிர்த்தார்.

2014ஆம் ஆண்டில் தான் அவர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போதிருந்து அவருடைய நடத்தையில் வித்தியாசம் காணப்பட்டது. பின்னர் நான் அவரிடம் திருமணம் செய்யக் கூறி கேட்டேன். அப்போது என்னிடம் நேரடியாக மறுத்தார்.

  • So this lady has made accusations against Babar Azam "he promised to marry me, he got me pregnant, he beat me up, he threatened me and he used me"
    Video courtesy 24NewsHD pic.twitter.com/PTkvdM4WW2

    — Saj Sadiq (@Saj_PakPassion) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2016ஆம் ஆண்டு நான் கர்ப்பமானதாக கூறினேன். அப்போது மிகவும் வித்தியாசமாக நடந்துகொண்டதோடு, என்னை உடல்ரீதியாக துன்புறுத்தினார். எனது குடும்பத்தினரின் நம்பிக்கையை இழந்ததால், நான் மீண்டும் என் குடும்பத்துடன் இணைய முடியவில்லை.

எனது நண்பர்களின் உதவியால் நான் கருக்கலைப்பு செய்தேன். 2017ஆம் ஆண்டில் பாபர் அஸாம் மீது நாசிராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். 10 வருடங்களாக உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்'' என்றார்.

பாபர் அஸாம் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அவருடைய குடும்பத்தினரும், அவரும் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய அணிக்காக 250 ஒருநாள் போட்டிகள்.. கோலியின் அடுத்த சாதனை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.