ETV Bharat / sports

#HBD ரஹானே - இவர் ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை...

இந்திய கிரிகெட் அணி வீரர் ரஹானே இன்று(ஜூன்.6) தனது 33ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Ajinkya Rahane
ரஹானே
author img

By

Published : Jun 6, 2021, 3:30 PM IST

இந்திய கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரஹானே இந்திய அணியில் தவிர்க்க முடியாத, அதிக ரசிகர்கள் கூட்டம் கொண்ட முக்கிய வீரர் ஆவார். இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2,962 ரன்களையும், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,583 ரன்களையும், டி20 போட்டிகளில் விளையாடி 375 ரன்களை அடித்துள்ளார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 15 சதங்களை அடித்துள்ளார். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 12 சதங்களை அடித்துள்ளார். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இவர் சதங்கள் அடித்த எந்த ஆட்டத்திலும் நமது இந்திய அணி தோற்கவில்லை. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து முறை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

இ.எஸ்.பி.என் ட்வீட்
இ.எஸ்.பி.என் ட்வீட்

இதிலும் நான்கு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இவர் பிறந்த நாளான இன்று(ஜூன்.6) இ.எஸ்.பி.என்(ESPN) தனது ட்விட்டர் தளத்தில், “இவர் ஒருபோது டெஸ்ட்டில் தோற்றதில்லை” என வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.