மும்பை: இலங்கைக்கு எதிரான நேற்றைய உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு அரையிறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் விளாசி இருந்தார்.
போட்டியின் முடிவுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஷார்ட் பால் குறித்த கேள்வி ஒன்றுக்குக் கொஞ்சம் காட்டமாகவே பதில் கூறியிருக்கிறார். ஷார்ட் பால் உங்களைத் தடுமாறச் செய்கிறதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஸ்ரேயாஸ், ஷார்ட் பால் என்னைத் தடுமாறச் செய்கிறதா? இன்றைய ஆட்டத்தில் நான் ஷார்ட் பாலில் பவுண்டரி அடித்ததை நீங்கள் பார்த்தீர்களா? பொதுவாக நீங்கள் பந்தை அடிக்க முயன்றாலே, அதில் அவுட் ஆகுவதற்கு அத்தனை வாய்ப்புகளும் உள்ளது.
அது எந்த விதமான பாலாக இருந்தாலும் சரி. ஒரு இரண்டு மூன்று முறை நான் போல்ட் ஆகி இருக்கலாம். உடனே எனக்கு இன்ஸ்விங்கே ஆட தெரியவில்லை என்பீர்கள். வீரர்களான நாங்கள் எவ்வித பந்திலேயேயும் அவுட் ஆகச் சாத்திய கூறுகள் உள்ளன. வெளியே இருக்கும் நீங்கள் தான் இவருக்கு ஷார்ட் பால் ஆட தெரியாது என்ற கற்பிதங்களை உருவாக்கிவிடுகிறீர்கள்.
நான் மற்ற மைதானங்களை விட வான்கடே மைதானத்தில் தான் அதிகம் விளையாடி இருக்கிறேன். மற்ற பிட்ச்களை விட இங்கு தான் பவுன்சருக்கு அதிகம் ஒத்துழைப்பு இருக்கும். அப்படிப் பட்ட பிட்ச்சில் தான் நான் இன்று அதிக ரன்களை அடித்து இருக்கிறேன்.
அதனால் ஷார்ட் பாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியும். ஒரு ஷார்ட்டை ஆடுகையில் அது சில நேரம் சரியாக அமையலாம். சில நேரம் அமையாமலும் போகலாம். ஒரு வேளை நான் ஷார்ட் பால்களைப் பல நேரங்களில் ஆடுகையில் அவுட் ஆகியிருக்கலாம். அதனால் உங்களுக்கெல்லாம் அதில் எனக்கு பிரச்னை இருப்பதாகத் தோன்றலாம். என்னைப் பொறுத்தவரையில் ஷார்ட் பாலை ஆடுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட மாற்று வீரர்!