தர்மசாலா : 13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதில் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்று வரும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் இன்னிங்சை டிவென் கான்வாய், வில் யங் ஆகியோர் தொடங்கினர்.
ஆரம்பமே பவுண்டரியுடன் தொடங்கி வில் யங் அதிரடி காட்ட, மறுபுறம் டிவென் கான்வாய் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் பந்துவீச்சில் சிலிப்பில் நின்ற ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து டிவென் கான்வாய் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
-
𝙎𝙥𝙚𝙘𝙩𝙖𝙘𝙪𝙡𝙖𝙧 𝙎𝙝𝙖𝙢𝙞!
— BCCI (@BCCI) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
TAKE. A. BOW 🫡#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/EbD3trrkku
">𝙎𝙥𝙚𝙘𝙩𝙖𝙘𝙪𝙡𝙖𝙧 𝙎𝙝𝙖𝙢𝙞!
— BCCI (@BCCI) October 22, 2023
TAKE. A. BOW 🫡#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/EbD3trrkku𝙎𝙥𝙚𝙘𝙩𝙖𝙘𝙪𝙡𝙖𝙧 𝙎𝙝𝙖𝙢𝙞!
— BCCI (@BCCI) October 22, 2023
TAKE. A. BOW 🫡#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/EbD3trrkku
8வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் வில் யங் (17 ரன்) முகமது ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கி விளையாடி வருகிறார். இரண்டு முறை விக்கெட் கண்டத்தில் இருந்து தப்பிய ரச்சின் ரவீந்திரா அடித்து ஆடி இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்தார்.
ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அரைசதம் தாண்டியும் விளையாடி வந்த ரச்சின் ரவீந்திராவை ஒருவழியாக முகமது ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். ஷமி பந்துவீச்சில் சுப்மான் கில்லிடம் விக்கெட்டை பறிகொடுத்து ரச்சின் ரவீந்திரா (75 ரன்) வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் லாதம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.
-
India go to the top of #CWC23 points table with a brilliant win in Dharamsala 🎉#CWC23 | #INDvNZ pic.twitter.com/lLCp1okFPG
— ICC (@ICC) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India go to the top of #CWC23 points table with a brilliant win in Dharamsala 🎉#CWC23 | #INDvNZ pic.twitter.com/lLCp1okFPG
— ICC (@ICC) October 22, 2023India go to the top of #CWC23 points table with a brilliant win in Dharamsala 🎉#CWC23 | #INDvNZ pic.twitter.com/lLCp1okFPG
— ICC (@ICC) October 22, 2023
குல்திப் யாதவ் பந்துவீச்சில் கேப்டன் டாம் லாதம் (5 ரன்) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் அடித்து ஆடிய டேரில் மிட்செல் சதம் அடித்தார். நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 130 ரன்களை கடந்து போது முகமது ஷமியின் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். மார்க் சாம்பமன் 6 ரன், மிட்செல் சாட்ன்டனர் 1 ரன், மேட் ஹென்ரி டக் அவுட், இறுதியாக லாக்கி பெர்குன 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 273 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்திப் யாதவ் 2 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 71 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. ரோஹித் சர்மா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கில் 26, ஷ்ரேயாஸ் ஐயர் 33, கே.எல்.ராகுல் 27, சூர்யகுமார் யாதவ் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபக்கம் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அதன்பின் ஜடேஜா களம் இறங்க, இந்த கூட்டணி பந்துகளை நாலா புறமும் சிதறடித்து, இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.
சதம் நெருங்கிய கோலி 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், நியூசிலாந்து அணியை உலக கோப்பையில் 20 வருடங்கள் கழித்து இந்திய அணி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : India Vs New Zealand : வெற்றி வாகைசூடுமா இந்தியா?.. 5வது வெற்றி யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்!