ஹராரே: ஜிம்பாப்வேவில் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஆக 18) தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
அதிகபட்சமாக ரெஜிஸ் சகாப்வா 51 பந்துகளுக்கு 35 ரன்களை எடுத்தார். அதேபோல பிராட் எவன்ஸ் 29 பந்துகளுக்கு 33 ரன்களையும், ரிச்சர்ட் 42 பந்துகளுக்கு 32 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
அந்த வகையில் 190 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர். தொடக்க ஆட்டகாரர்களான ஷிகர் தவான், சுப்மன் கில் இருவரும் விக்கெட் இழக்காமல் 27.2 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை குவித்துள்ளனர். குறிப்பாக ஷிகர் தவான் 102 பந்துகளுக்கு 66 ரன்களையும், சுப்மன் கில் 64 பந்துகளுக்கு 72 ரன்களையும் குவித்துள்ளார். இன்னும் 22 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றிக்கு 30 ரன்கள் மட்டுமே தேவையுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெரும் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: மான்செஸ்டர் யுனைடட் கால்பந்து அணியை விலைக்கு வாங்க கோடீஸ்வரர் ராட்கிளிஃப் ஆர்வம்