ETV Bharat / sports

IND vs WI: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் 4வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது - Virat kohli

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் 4வது ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
India vs west indies
author img

By

Published : Aug 12, 2023, 2:21 PM IST

புளோரிடா: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் மூன்று போட்டிகள் மேற்கு இந்திய தீவுகளில் நடந்து முடிந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி இன்று (ஆகஸ்ட் 12) புளோரிடா, லாடர்ஹில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இந்த 4வது போட்டியில் வெற்று பெற்று சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இருக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியோ இதில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங்கில் இன்னும் தடுமாற்றத்துடனேயே இருக்கின்றது. கடந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு வந்ததாக தெரிகிறது. ஆனாலும், தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் போன்றவர்களின் தடுமாற்றத்தால் மிடில் ஆடரில் களம் இறங்குபவர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் அவர்களால் அணிக்காக நல்ல ரன்களை எடுக்க முடியாமல் போகிறது. திலக் வர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அணிக்கு பலமாக இருந்தாலும், மற்ற வீரர்களின் பங்களிப்பும் அணியை வெற்றி பெற செய்ய முக்கியமாக பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் நல்ல நிலையில் உள்ளார். அது அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது. ஆனால் வேக பந்து வீச்சாளர்கள் அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார் இன்னும் சோபிக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மிடில் ஆடர் அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக இருக்கிறது. பந்து வீச்சில் ரோஸ்டன் சேஸ் கடந்த போட்டியில் நன்றாக செயல்பட்டார். இந்த மைதானத்தில் டி20 போட்டிகளில் ஜான்சன் சார்லஸ் 152.94 ஸ்ட்ரைக்-ரேட்டை வைத்துள்ளார்.

இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதிய டி20 ஆட்டங்களில் இரண்டிலுமே இந்திய அணி சுலபமாக வெற்றி பெற்றுள்ளது. மேலும், இங்கு நடந்த 13 ஆட்டங்களில் 11 ஆட்டங்கள் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணிக்கப்பட்ட அணி விவரம்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் அல்லது உம்ரான் மாலிக்.

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர் அல்லது ரோஸ்டன் சேஸ், அகேல் ஹொசின், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்.

ஆட்ட நேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது,

நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.