லக்னோ: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில் இன்று(பிப்.24) லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் டி-20 தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக இஷான் கிஷன் 56 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா 32 பந்துகளுக்கு 44 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளுக்கு 57 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். இலங்கை பந்து வீச்சாளர்கள் லஹிரு குமர, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மொத்தமாக இலங்கை அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: IND vs SL: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு