ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.
தொடர் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கெபெர்ஹாவில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 19 புள்ளி 3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
தொடர் மழை காரணமாக டக் வொர்த் லிவீஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 13 புள்ளி 5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் இன்று (டிச. 14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டும் தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
-
South Africa Won the Toss & elected to Field https://t.co/NYt49KwF6j #SAvIND
— BCCI (@BCCI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">South Africa Won the Toss & elected to Field https://t.co/NYt49KwF6j #SAvIND
— BCCI (@BCCI) December 14, 2023South Africa Won the Toss & elected to Field https://t.co/NYt49KwF6j #SAvIND
— BCCI (@BCCI) December 14, 2023
அதேநேரம், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்க அணி உள்ளது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வருண பகவான் வழிவிட வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
இந்தியா : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்
-
🚨 Toss and Playing XI
— BCCI (@BCCI) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
South Africa win the toss and elect to bowl first
The Playing XI for #SAvIND today 💪
Follow the match ▶️ https://t.co/NYt49KwF6j#TeamIndia pic.twitter.com/URleBzssxB
">🚨 Toss and Playing XI
— BCCI (@BCCI) December 14, 2023
South Africa win the toss and elect to bowl first
The Playing XI for #SAvIND today 💪
Follow the match ▶️ https://t.co/NYt49KwF6j#TeamIndia pic.twitter.com/URleBzssxB🚨 Toss and Playing XI
— BCCI (@BCCI) December 14, 2023
South Africa win the toss and elect to bowl first
The Playing XI for #SAvIND today 💪
Follow the match ▶️ https://t.co/NYt49KwF6j#TeamIndia pic.twitter.com/URleBzssxB
தென் ஆப்பிரிக்கா : எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர்
இதையும் படிங்க : அர்ஜூனா விருதுக்கு முகமது ஷமியின் பெயர் பரிந்துரை - பிசிசிஐ தகவல்!