ஹாமில்டன்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 2022 தொடர் நியூசிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக, யாஸ்திகா பாட்டியா 80 பந்துகளுக்கு 50 ரன்களை குவித்தார்.
அதேபோல ஷஃபாலி வர்மா 42 பந்துகளுக்கு 42 ரன்களை எடுத்தார். தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்துவீச்சில் வங்கதேச அணியின் ரிது மோனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவருக்கு அடுத்து நஹிதா அக்டர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்படி 230 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்