மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரு போட்டி கொண்ட டெஸ்tடில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணி முடிவடைந்த இரண்டு போட்டிகளிலுமே வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
Powered by Phoebe Litchfield's century, Australia have put up the highest total against India in Women's ODIs 😲#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/94CbW0XZy9
— ICC (@ICC) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Powered by Phoebe Litchfield's century, Australia have put up the highest total against India in Women's ODIs 😲#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/94CbW0XZy9
— ICC (@ICC) January 2, 2024Powered by Phoebe Litchfield's century, Australia have put up the highest total against India in Women's ODIs 😲#INDvAUS 📝: https://t.co/25kOaORNSC pic.twitter.com/94CbW0XZy9
— ICC (@ICC) January 2, 2024
அதன்படி தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி களம் இறங்கினர். இந்த கூட்டணி இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி 189 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. அலிசா ஹீலி 4 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களம் கண்ட எல்லிஸ் பெர்ரி 16, பெத் மூனி 3, தஹ்லியா மெக்ராத் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார். பின்னர் 119 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழக்க, அதையடுத்து வந்த வீராங்கனைகள் அதிரடி காட்டினர்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்களும், அமன்ஜோத் கவுர் 2 விக்கெட்களும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது. ஏற்கனவே தொடரை இழந்த இந்திய அணி, இந்த போட்டியிலாவது வென்று ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டின் கிரிக்கெட் நாயகர்கள்.. பேட் கம்மின்ஸ் முதல் விராட் கோலி வரை!