ETV Bharat / sports

தொடரை வெல்லுமா இந்தியா? தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆஸ்திரேலியா? - iyer

India Vs Australia 3rd T20 Cricket : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், நாளை இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நடைபெறவுள்ளது.

India vs Australia 3rd T20I match tomorrow at Guwahati

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:01 AM IST

கவுகாத்தி: இந்திய - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை (நவம்பர் 28) கவுகத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரையில், நடைபெற்ற இரு போட்டிகளிலுமே வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர் 4 மற்றும் 5வது போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். மேலும், துணைக் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். இவர் பிளேயிங் 11-ல் வரும் பட்சத்தில் திலக் வர்மா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திலக் வர்மா கடந்த இரண்டு போட்டிகளில் மொத்தமாகவே 12 பந்துகளையே சந்தித்துள்ளார். முதல் போட்டியில் 12 ரன்களும், இரண்டாவது போட்டியில் அவர் 7 ரன்களும் எடுத்துள்ளார். இடது கை பேட்டரான ரிங்கு சிங் இரு போட்டிகளிலுமே முக்கிய பங்கை வகித்துள்ளார்.

முதல் போட்டியில் செஸ்ஸிங்கில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதேபோல் 2வது போட்டியில் 9 பந்துகளில் 4 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் 2வது போட்டியில் 19 ரன்களில் வெளியேறினாலும், முதல் போட்டியில் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒன் டவுனில் களம் இறங்கும் இஷான் கிஷன் இரு போட்டிகளிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், 2வது போட்டியில் நல்ல தொடக்கத்தை அணிக்கு வழங்கினர்.

மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியை பெறுத்தவரையில், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் உலகக் கோப்பையை தொடர்ந்து இதிலும் விளையாடி வருவதால் அவர்களிடம் சற்று சோர்வு காணப்படுகிறது.

இவர்கள் மூவருமே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிக் பாஷ் லீக்கில் விளையாட உள்ளனர். அதனால் அதற்கு முன்பாக சற்று ஒய்வு அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பந்து வீச்சில் சற்று செதப்புவதால் தோல்வியை தழுவுகின்றனர்.

இந்திய அணி நாளைய போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றும். அதேநேரம் ஆஸ்திரேலிய அணி தொடரை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் விளையாடும். அதனால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விகீ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆஸ்திரேலியா: மேத்யூ வேட் (விகீ & கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை டென்னிஸ்: 1976ஆம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இத்தாலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.