ETV Bharat / sports

Ind Vs SL : ஆசிய கோப்பை யாருக்கு? இந்தியாவுடன் தாக்குபிடிக்குமா இலங்கை! வேண்டும் வருணபகவான் கருணை? - Ind Vs Sl Score Card

Ind Vs SL Asia Cup 2023 Final :ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செப். 17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

cricket
cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 7:13 AM IST

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று (செப். 17) பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கியது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கிளைமாக்ஸ் காட்சியான இறுதிப் போட்டி நெருங்கி உள்ளது.

இறுதிப் போட்டிக்கு இந்தியா - இலங்கை அணிகள் தகுதி பெற்று உள்ளனர். கொழும்பி பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியே தழுவாத இந்திய அணி, தனது கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேசம் அணியிடம் தோல்வி கண்டது.

சிறிய அணிகளுடன் விளையாடும் போது இந்திய வீரர்கள் சில நேரங்களில் சோடை போவதாக கூறப்படுகிறது. கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய வீரர்கள் கத்துக்குட்டி அணிகளிடம் சில சமயங்களில் கோட்டைவிடுவதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது.

தொடக்க வீரர் சுப்மான் கில் நல்ல பார்மில் உள்ளார். நடப்பாண்டில் அவர் இதுவரை ஆறு சதங்கள் விளாசி உள்ளார். இதற்கு முன் விராட் கோலி நடப்பாண்டில் 5 சதங்கள் விளாசி முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை சுப்மான் கில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து உள்ளார். அதேபோல் கேப்டன் ரோகித் சர்மாவும் ஓரளவுக்கு பார்மில் உள்ளார்.

மற்ற வீரர்கள் யாரும் நடப்பு ஆசிய தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் விளாசி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பந்துவீச்சை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆட்டங்களில் குல்தீப் யாதவ் கை சற்று ஓங்கியே காணப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்தார்.

  • Brace yourselves for an electrifying showdown that's set to make cricket history! India goes head to head with Sri Lanka in the Asia Cup 2023 Finals, and the excitement is off the charts! 🇮🇳🇱🇰#AsiaCup2023 #INDvSL pic.twitter.com/pwsLM49YKE

    — AsianCricketCouncil (@ACCMedia1) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மற்றபடி முகமது ஷமி, ஹர்த்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை அணியை பொறுத்தவரை கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து தொடரை விட்டே விரட்டியடித்தனர். இலங்கை அணியில் துனித் வெல்லலேகே கவனம் ஈர்க்கிறார்.

கடைசியாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி, 42 ரன்களும் விளாசி இருந்தார். அதனால் இந்திய அணிக்கு அவர் கடும் அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் துளியும் ஐயமில்லை. அவரை இந்திய வீரர்கள் திறம்பட சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் அசலன்காவும் இலங்கை அணிக்கு பலம் சேர்க்கிறார்.

பேட்டிங்கை பொறுத்தவரை குசல் மென்டிஸ் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். ஆசிய கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் 50 சதவீதம் என்ற அளவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கும் என கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் துளியும் யோசனையில்லை. இந்திய அணி எப்படியாவது டாசை கைப்பற்ற வேண்டும். வருணபகவான் வழிவிட்டு ராம - ராவண ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐய்யர், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா.

இலங்கை : குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனக (கேப்டன்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலேகே, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமந்த, கசுன் பிரத் ராஜித, பின் திமுரத் ரஜித கருணாரத்ன.

இதையும் படிங்க : Asia Cup Final 2023: 9ஆவது முறையாக இறுதி போட்டியில் நேருக்கு நேர்.. கோப்பையை வெல்லப்போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.