ETV Bharat / sports

Ind Vs SA : டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 8:04 PM IST

India Vs South Africa 2nd T20: இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

Etv Bharat
Etv Bharat

கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிச. 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.

போட்டி தொடங்கும் முன்பாக டர்பனில் காலை முதல் நிலவிய மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து கனமழை கொட்டியது. ஆட்டம் துவங்குவதற்கு முன்பும் மழை கொட்டியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கியதால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (டிச.12) கெபெர்ஹாவில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரண்டு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வருண பகவான் வழிவிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்திக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் வருமாறு :

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் , திலக் வர்மா, குல்தீப் யாதவ்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், ஜெரால்ட் கோட்ஸி, நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 3 அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.