கொழும்பு : 16வது ஆசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றன. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசன் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
-
Start your weekend with an inspiring interaction 🤗
— BCCI (@BCCI) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Virat Kohli shares his experience with budding cricketers 👏👏#TeamIndia | #AsiaCup2023 | @imVkohli pic.twitter.com/FA0YDw0Eqf
">Start your weekend with an inspiring interaction 🤗
— BCCI (@BCCI) September 9, 2023
Virat Kohli shares his experience with budding cricketers 👏👏#TeamIndia | #AsiaCup2023 | @imVkohli pic.twitter.com/FA0YDw0EqfStart your weekend with an inspiring interaction 🤗
— BCCI (@BCCI) September 9, 2023
Virat Kohli shares his experience with budding cricketers 👏👏#TeamIndia | #AsiaCup2023 | @imVkohli pic.twitter.com/FA0YDw0Eqf
சூப்பர் 4 சுற்றில் சக அணிகளுடன் மோதி, முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதலாவது சூப்பர் 4 சுற்றில் வங்காளதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. தொடர்ந்து 9 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்காள தேசம் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று (செப். 10) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் 3வது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் அதில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் முழு பார்மில் உள்ளனர். இந்திய அணிக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் சொதப்பில் நிலை நிலவுகிறது என்றால் அது பொய்யாகாது.
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இன்னும் தங்களது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோல் பந்துவீச்சிலும் இந்திய அணி சற்று பலவீனமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. வருணபகவான் கருணை அன்று இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் வீழ்த்திவிடுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சூழுரைத்து உள்ளார். அவரது பேச்சுக்கு இந்திய வீரர்கள் விளையாட்டின் மூலம் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
இன்றைய ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு 90 சதவீதம் வரை இருக்கும் என இலங்கை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அப்படி மழையின் குறுக்கிட்டால் ஆட்டம் பாதித்தால் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும், நாளை (செப். 11) திங்கட்கிழமையே மீண்டும் போட்டி நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வருணபகவான் கருணையும் நிச்சயம் வேண்டும் என்பது உறுதி.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் :
இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா.
பாகிஸ்தான் : பாபர் ஆசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், பஹீம் அஷ்ரப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், சவுத் ஷகீல், முகமது நவாஸ், உசாமா மிர், அப்துல்லா ஷபீக், முகமது ஹரிஸ், முகமது வாசிம் ஜூனியர்.
இதையும் படிங்க : IND VS PAK: இந்திய - பாகிஸ்தான் ஆட்டம்... மழைக்கு 90 சதவிதம் வாய்ப்பு! என்ன நடக்க போகுது?