மொஹாலி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று நடைபெறுகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி எதிர்கொள்கிறது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த கே.எல்.ராகுல், கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கி செஞ்சூரி அடித்து அசத்தினார். இருப்பினும், ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த நாடுகளுடன் மோதும் போது தான் அவரது உண்மையான திறமை வெளிவரும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக தவிர்த்து சிறந்த பேட்ஸ்மேனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் அணிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக சுழல் அஸ்வின் திரும்பி உள்ளார். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி இருந்தார். அதன்பின் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
-
Preps before the start of a cracking series 👌 😎#TeamIndia | #INDvAUS pic.twitter.com/Jmwm7FkfmN
— BCCI (@BCCI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Preps before the start of a cracking series 👌 😎#TeamIndia | #INDvAUS pic.twitter.com/Jmwm7FkfmN
— BCCI (@BCCI) September 21, 2023Preps before the start of a cracking series 👌 😎#TeamIndia | #INDvAUS pic.twitter.com/Jmwm7FkfmN
— BCCI (@BCCI) September 21, 2023
அதேபோல், இன்றைய ஆட்டத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி இணைகிறது என்று கூறலாம். அஸ்வின் - ஜடேஜா இணை மட்டுமே பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் காயத்தால் அவதிப்பட்டு வரும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக உலக கோப்பை இந்திய அணிக்கு அஸ்வின் தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இன்றைய ஆட்டத்தை அஸ்வின் நிச்சயம் தன் வசமாக்குவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மற்றபடி இந்திய அணியில் சுப்மான் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பந்துவீச்சில் வேகத்திற்கு ஆசிய கோப்பை நாயகன் முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அந்த அணிக்கு கடந்த தென் ஆப்பிரிக்க தொடர் திருப்திகரமாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-க்கு 2 என்ற கணக்கில் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளம் படையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கடும் சவால் அளித்தது.
- — BCCI (@BCCI) September 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— BCCI (@BCCI) September 21, 2023
">— BCCI (@BCCI) September 21, 2023
அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி நூறு ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிரளச் செய்தது. பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர். ஸ்டீவன் சுமித் உள்ளிட்ட் சீனியர் வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மைதானங்களை நன்கு அறிந்தவர்கள். பழைய ஆட்டங்களில் 400 ரன்களுக்கு மேல் இந்திய மைதானங்களில் குவித்து நமது அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தவர்கள் தான். மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவர்களுக்கு மேலும் கைகொடுக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாகவும் இந்த தொடர் அமையும். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் வரும் உலக கோப்பையிலும் இந்திய அணி ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி, பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றும். அப்படி நடக்கும் பட்சத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான சர்வதேச தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வீரர்கள் வென்று வரலாறு படைப்பார்களா என்பது இன்றைய போட்டியில் தெரிய வரும். இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது எனக் கூறப்படுகிறது. மொஹாலியில் மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு :
இந்தியா : கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், இஷான் கிஷன், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்,
ஆஸ்திரேலியா : அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், நாதன் எல்லிஸ், சீன் அபோட், மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன் , தன்வீர் சங்கா
இதையும் படிங்க : IND Vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது!