ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதவர் விராட் கோலி: மார்க் டெய்லர் - சர்வதேச கிரிக்கெட்

ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர் மற்றும் நல்ல மனிதர் என்ற இருவிதமான வேலைகளையும் செய்யக் கூடிய விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

virat-kohli-is-a-very-powerful-guy-in-world-cricket-mark-taylor

author img

By

Published : Nov 15, 2020, 10:44 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடயேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், கிரேக் சேப்பல், டேரன் லெஹ்மன் ஆகியோர் பேசுகையில், '' சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தவிர்க்க முடியாத வீரர். ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர் மற்றும் நல்ல மனிதர் என்ற இருவிதமான வேலைகளையும் சிறப்பாக கையாள்கிறார்.

அதேபோல் தனது பொறுப்பை உணர்ந்து அதற்கு உரிய மரியாதை வழங்குகிறார். இப்போதும் களத்தில் அவராகவே உள்ளார். விளையாடுவோர் மற்றும் விளையாடியவர்களுக்கு மிகவும் மரியாதை செலுத்துவதற்காக நான் அவருடன் பேசிய காலங்களில் நான் எப்போதும் அவரைக் கண்டேன்.

இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் கோலி தான். அதேபோல் மற்றவர்களை ஈர்க்கும் வீரராக விராட் கோலி மட்டும் தான் உள்ளார். அவரிடம் எதிர்காலத்தைப் பற்றிய பார்வை உள்ளது. அதனைப்பற்றி பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.

டேரன் லெஹ்மன்
டேரன் லெஹ்மன்

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக ஆடுகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியாவுக்காக ஆடுவதால், இன்னும் மரியாதை கூடுகிறது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வமின்றி இருந்தால், நிச்சயம் அதன் தாக்கம் வேறு மாதிரி இருக்கும்.

விராட் கோலி
விராட் கோலி

கோலி ஆடுவது ஒரே டெஸ்ட் போட்டி என்றாலும், அதனை வெற்றிபெறவே விரும்புவார். அப்படி தான் அவர் விளையாடுவார். முழுமையான எனர்ஜியையும் கொடுப்பார். தோற்க விரும்பமாட்டார். மாபெரும் கிரிக்கெட் வீரர்கள் எல்லாரும் எல்லைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வார்கள். அதைதான் விராட் கோலி செய்கிறார்.ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்புகிறார் ''என்றனர்.

இதையும் படிங்க: இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பந்துவீசும் தமிழ்நாடு வீரர் நடராஜன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.