ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது.
இதில், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்துவிட்டது. இந்நிலையில், ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
இப்போட்டியில், கேப்டன் விராட் கோலி 23 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையைப் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 12 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலகச் சாதனையை முறியடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் 309 ஒருநாள் போட்டிகளில் (300 இன்னிங்ஸ்) விளையாடி எடுத்திருந்த 12,000 ரன்களை, விராட் கோலி 251ஆவது போட்டியில் (242 இன்னிங்ஸ்) எட்டி புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: “ஐபிஎல்-லில் செய்ததை எனது அணியிலும் செய்வேன்” - காகிசோ ரபாடா