ETV Bharat / sports

பந்து வீசியதில் தாமதம்... ஆஸி.,க்கு அபராதம் விதித்த ஐசிசி

துபாய்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்திற்காக ஆஸ்திரேலியா அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Australia
Australia
author img

By

Published : Dec 29, 2020, 7:28 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியது மட்டுமில்லாமல், சதமடித்து அணிக்கு வெற்றியையும் தேடித்தந்த கேப்டன் ரஹானே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாமல் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக ஐசிசி 40 விழுக்காடு அபராதம் விதித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளில் இருந்து நான்கை குறைத்துள்ளது.

இதையும் படிங்க:'சொல்லி அடித்த கில்லி...' வைரலாகும் கோலி ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.