ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2022க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கேப்டனாக ரோஹித் சர்மா , துணை கேப்டனாக கே.எல். ராகுல், வீரர்களாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், ஒய். சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர முகமது சமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரபி விஷயாய், தீபக் சாஹர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுடனான டி20 இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுடனான டி20 இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,
தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: "விராட் கோலி என்னை விட திறமையானவர்" - சவுரவ் கங்குலி