ETV Bharat / sports

Ind Vs WI : வீறுநடைபோடும் இந்தியா... அதிரடி காட்டும் யாஸ்வி... மீளுமா வெஸ்ட் இண்டீஸ்! - இந்தியா வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீறு நடைபோட்டு வருகிறது. தொடக்க வீரர் யாஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

Cricket
Cricket
author img

By

Published : Jul 13, 2023, 8:29 PM IST

டொமினிகோ : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை தாண்டி இந்திய வலுவான ஆடத்தை வெளிப்படுத்தி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று (ஜூலை. 12) தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் 20 ரன், மற்றொரு தொடக்க வீரர் டெஜ்நரேன் சந்திரபோல் 12 ரன்கள் மட்டும் எடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்திய பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தங்களது சுழல் மாயாலாத்தை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை விரைவில் வெளியேற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக நடுக்கள வீரர் அலிக் அதான்சே மட்டும் 47 ரன்கள் குவித்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார்.

மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஆட்டமிழந்தனர். இறுதியாக 64 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

அண்மையில் நடந்த சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் அசத்தி உள்ளார். அதேநேரம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 33வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அஸ்வின் சாதனை படைத்து உள்ளார்.

அஸ்வினை தொடர்ந்து மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் இன்னிங்சை யாஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா தொடங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி துரித ரன்சேகரிப்பில் ஈடுபட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக அறிமுகமான யாஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் குவித்து உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இலக்கை எட்ட இந்திய அணிக்கு இன்னும் 45 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

இதையும் படிங்க : IND VS WI:150 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி-அஸ்வின் புதிய சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.