ETV Bharat / sports

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - கேப்டன் ராகுல்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள் வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
author img

By

Published : Aug 19, 2022, 11:06 PM IST

ஹராரே: கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் 189 ரன்களை இலக்கை விக்கெட் இழப்பின்றி துரத்திய இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் இந்தியா பேட்டிங் , பீல்டிங் , பந்துவீச்சு என அனைத்திலும் அற்புதமாக செயல்பட்டது. இந்த ஆட்டத்திலும் அவ்வாறே விளையாடினால் தொடரை எளிதாக கைப்பற்றி விடலாம்.

சொந்த மண்ணில் விளையாடும் ஜிம்பாப்வே உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. முதல் போட்டியின் போது தவானுக்கு சிறு காயம் ஏற்பட்டதால் , ஒரு வீரரை மட்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்..

போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 12.45 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: பாரா தடகளப் போட்டிகள்... உலக சாதனைப்படைத்த இந்தியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.