ETV Bharat / sports

IN vs WI T20: இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

India beat West Indies by eight runs in second T20

author img

By

Published : Feb 18, 2022, 11:50 PM IST

கொல்கத்தா: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல்போட்டி பிப்.16ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் இன்று(பிப்.18) இரண்டாவது டி20 போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 41 பந்துகளுக்கு 52 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

அதேபோல ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 52 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். 187 ரன்களை இலக்காக கொண்டு ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆரம்பத்தில் சற்று தடுமாறி பின்னர் ரன்களை குவிக்க தொடங்கினர். அப்படி கடைசி ஓவர்கள் வரை விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்களுடன் ஆட்டத்தை பறிகொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டி தொடரைப்போலவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: IN vs WI T20: இந்தியா வெற்றி... ரோஹித் சர்மா அதிரடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.