ETV Bharat / sports

IND vs SL: இலங்கை அணியை 137 ரன்களில் சுருட்டிய இந்தியா

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

India beat Sri Lanka by 62 runs in the first T20I match in Lucknow

author img

By

Published : Feb 24, 2022, 10:38 PM IST

லக்னோ: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று(பிப்.24) முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தனர். இதையடுத்து இலங்கை அணி 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்தது.

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே இலங்கை அணியால் எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சரித் அசலங்கா 43 பந்துகளுக்கு 53 ரன்களை எடுத்தார். அதன்படி இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IND vs SL: இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சைஇந்தியா இலங்கை டி20 அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.