ETV Bharat / sports

IND vs ZIM ஒருநாள் தொடர்... கலக்குமா ராகுல் படை... நாளை முதல் போட்டி - இந்தியா

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, ஹராரே விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மதியம் 12.45 மணிக்கு நடைபெறும்.

IND vs ZIM ஒருநாள் தொடர்
IND vs ZIM ஒருநாள் தொடர்
author img

By

Published : Aug 17, 2022, 8:19 PM IST

ஹராரே: இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகளும் ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரான ஹராரேவில் உள்ள ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்தத் தொடருக்கு முதலில், ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். பின்னர், கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய நிலையில், அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஷிகர் தவானுக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரைப் போலவே விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஒருநாள் அணியில் ஓய்வு நீட்டிக்கப்பட்டது. மேலும், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில், வாஷிங்டன் சுந்தர் தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவைத் தாங்குமா ஜிம்பாப்வே: இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாளை (ஆக. 18) நடைபெறுகிறது. இதில், இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ராகுல், தவான், சுப்மன் கில், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் எனப் பலமாக காணப்படுகிறது.

ருதுராஜ், ராகுல் திரிபாதி ஆகியோரும் பேட்டிங் பெஞ்சில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை புவியின் தலைமையில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹர், ஆவேஷ் கான் வேகத்தாக்குதலுக்கு காத்திருக்கின்றனர். ஷர்துல் தாக்கூர் ஆல்-ரவுண்டராக தனது இடத்தை இறுகப்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி இந்தியாவுடன் தொடர்ச்சியாக விளையாடாத நிலையில், இரு அணிகளும் விளையாடுவது ஜிம்பாப்வே அணிக்கு பல்வேறு விதத்தில் நன்மையானதாகும். சமீபத்தில், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று ஜிம்பாப்வே அணி மிகுந்த நம்பிக்கையில் உள்ளது. இரு அணிகளும் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றனர்.

இந்தியா: கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர், ஷாபாஸ் அகமது.

ஜிம்பாப்வே: ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), ரியான் பர்ல், தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டக்குட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமானி, ஜான் மசரா, ரிச்சர்யா முண்டோர்கா, டோனி விண்யான்டோர்கா, டோனி வினியோன்கார்கா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.

இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.