பெங்களூரு: இலங்கை அணி, இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (மார்ச் 12) தொடங்கியுள்ளது.
வலுபெறும் இந்தியா
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில், 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை எம்புல்தெனியா, ஜெயவிக்கிரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
-
Head Coach Rahul Dravid and former #TeamIndia Captain @imVkohli congratulate Suranga Lakmal as he is all set to bid adieu to international cricket.@Paytm #INDvSL pic.twitter.com/Vroo0mlQLB
— BCCI (@BCCI) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Head Coach Rahul Dravid and former #TeamIndia Captain @imVkohli congratulate Suranga Lakmal as he is all set to bid adieu to international cricket.@Paytm #INDvSL pic.twitter.com/Vroo0mlQLB
— BCCI (@BCCI) March 13, 2022Head Coach Rahul Dravid and former #TeamIndia Captain @imVkohli congratulate Suranga Lakmal as he is all set to bid adieu to international cricket.@Paytm #INDvSL pic.twitter.com/Vroo0mlQLB
— BCCI (@BCCI) March 13, 2022
இதையடுத்து, பேட்டிங்கைத் தொடர்ந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 86 எடுத்து, 166 ரன்கள் பின்தங்கியிருந்தது.
5 ஓவர்களில் காலி
இந்நிலையில், டிக்வெல்லா, எம்புல்தெனியா ஆகியோர் இரண்டாம் நாள் ஆட்டத்தை நேற்று (மார்ச் 13) தொடங்கினர். மேலும், ஆட்டம் சிறு தாமதாகவே தொடங்கியது. ஆட்டம் தொடங்கி 5 ஓவர்களில் இலங்கை அணி ஆல்-அவுட்டானது. வெறும் 109 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கை, 143 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்திய அணி சார்பில், பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு, மயாங்க் - ரோஹித் ஜோடி சுமாரான தொடக்கத்தை அளித்தது. 22 ரன்கள் எடுத்து மயாங்க் எம்புல்தெனியா பந்துவீச்சில் வெளியேறினார். விஹாரியுடன் இணைந்து வேகமாக ரன் சேர்த்து வந்த கேப்டன் ரோஹித், 46 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து வந்த விஹாரி 35, கோலி 13 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது களமிறங்கிய ரிஷப் பந்த், இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
-
A day to remember for India.
— ICC (@ICC) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
✋ Bumrah’s first five-for at home.
💥 Pant with India’s fastest 50 in Tests.
🏏 Iyer hits his 2nd 50 of the match.#WTC23 | #INDvSL https://t.co/sFiTugrrtq
">A day to remember for India.
— ICC (@ICC) March 13, 2022
✋ Bumrah’s first five-for at home.
💥 Pant with India’s fastest 50 in Tests.
🏏 Iyer hits his 2nd 50 of the match.#WTC23 | #INDvSL https://t.co/sFiTugrrtqA day to remember for India.
— ICC (@ICC) March 13, 2022
✋ Bumrah’s first five-for at home.
💥 Pant with India’s fastest 50 in Tests.
🏏 Iyer hits his 2nd 50 of the match.#WTC23 | #INDvSL https://t.co/sFiTugrrtq
கபில் தேவ்வை தாண்டிய பந்த்
தடாலடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் அரைசதம் அடித்து ரிஷப், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா சார்பில் வேகமாக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். கபில் தேவ், 30 பந்துகளில் அரைசதம் அடித்ததே கடந்த 40 ஆண்டுகளாக சாதனையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவின் இயான் ஸ்மித், இந்தியாவின் தோனி ஆகியோரின் சாதனையை முறியடித்து, சர்வதேச அளவில் அதிவேகமாக அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஆனால், அரைசதம் அடித்தப்பின் மூன்றாவது பந்திலேயே ரிஷப் ஆட்டமிழந்தார். ஒருமுனையில், ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் நிலைத்து நின்ற ஆட மற்றவர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்த நிலையில், மூன்றாவது செஷனின் இறுதிப்பகுதியில் இந்தியா டிக்ளர் செய்தது.
வெற்றி நோக்கி இந்தியா
இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே லஹிரு திரிமண்ணே டக்-அவுட்டாகி வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்துள்ளது.
-
A stunning second day comes to a close in Bengaluru.
— ICC (@ICC) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 India require nine wickets to win.
🔹 Sri Lanka are 419 runs behind.#WTC23 | #INDvSL | https://t.co/g6fD3n4ID2 pic.twitter.com/1d1wS2JAWk
">A stunning second day comes to a close in Bengaluru.
— ICC (@ICC) March 13, 2022
🔹 India require nine wickets to win.
🔹 Sri Lanka are 419 runs behind.#WTC23 | #INDvSL | https://t.co/g6fD3n4ID2 pic.twitter.com/1d1wS2JAWkA stunning second day comes to a close in Bengaluru.
— ICC (@ICC) March 13, 2022
🔹 India require nine wickets to win.
🔹 Sri Lanka are 419 runs behind.#WTC23 | #INDvSL | https://t.co/g6fD3n4ID2 pic.twitter.com/1d1wS2JAWk
419 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணியும், 9 விக்கெட்டுகள் கைப்பற்றினால் வெற்றி என இந்திய அணியும் இன்றைய மூன்றாம் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
இரண்டாம் நாள் ஆட்டம்: செஷன் வாரியாக
முதல் செஷன்: இலங்கை - 23/4; இந்தியா - 61/1
இரண்டாவது செஷன்: இந்தியா - 138/4
மூன்றாவது செஷன்: இந்தியா - 104/4 ; இலங்கை - 28/1