ETV Bharat / sports

IND vs SL: மிரட்டும் இந்திய பவுலர்கள்; கதறும் இலங்கை

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்து, 166 ரன்கள் பின்தங்கியுள்ளது.

IND vs SL
IND vs SL
author img

By

Published : Mar 12, 2022, 10:01 PM IST

பெங்களூரு: இலங்கை அணி, இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

இதையடுத்து, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 12) தொடங்கியுள்ளது.

அணியில் அக்சர்

பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.

முன்னதாக, இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி தரப்பில் காயத்தால் அவதிப்படும் நிசங்கா, லஹிரு குமாரா ஆகியோருக்கு பதிலாக குஷால் மெண்டிஸ், பிரவின் ஜெயவிக்ரமா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைக்கொடுத்த ஸ்ரேயஸ்

இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் அரைசதம் கடந்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 59.1 ஓவர்கள் முடிவில் இந்தியா 252 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 92, ரிஷப் பந்த் 39, ஹனுமா விஹாரி 31 ரன்களை குவித்தனர். இலங்கை பந்துவீச்சில் எம்புல்தெனியா, ஜெயவிக்கிரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியும் விக்கெட்டுகளை வாரி வழங்கின. மெண்டிஸ், திரிமண்ணே ஆகியோரை பும்ரா வெளியேற்றி அசத்தினார். அடுத்து வந்த கருணாரத்னே, தனஞ்செயா ஆகியோரை முகமது ஷமியும், அசலாங்காவை அக்சர் படேலும் விக்கெட் எடுத்தனர்.

ஒரே நாளில் 16 விக்கெட்

மறுமுனையில், அரைசதம் நோக்கி நகர்ந்துவந்த மாத்யூஸ் 43 ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார். இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்துள்ளது.

மேலும், இந்திய அணியை விட 166 ரன்கள் இலங்கை பின்தங்கியுள்ளது. இலங்கை அணி தரப்பில் டிக்வெல்லா, எம்புல்தெனியா ஆகியோர் களத்தில் இருக்கும் நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

முதல் நாளில் மட்டும் இரண்டு அணிகள் சார்பிலும் மொத்தம் 16 விக்கெட்டுகள் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது

முதல் நாள் ஆட்டம்: செஷன் வாரியாக

முதல் செஷன் - இந்தியா - 93/4

இரண்டாவது செஷன் - இந்தியா - 159/6; இலங்கை - 16/3

மூன்றாவது செஷன் - இலங்கை 70/3

இதையும் படிங்க: ஆர்சிபியின் புதிய கேப்டன் - அறிவித்த கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.