கிறிஸ்ட்சர்ச்: இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று (நவ. 30) நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் 28 ரன்னும், கில் 13 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து வந்த அய்யர் 49 ரன்னும், பண்ட் 10 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். இந்நிலையில் இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.
இதையும் படிங்க: டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணை தலைவர் காலமானார்