பெங்களூரு: ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 34 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் ஆட களம் இறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கத்தை அளித்தாலும், கான்வே 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
-
Rachin Ravindra continues his brilliant #CWC23 with another century 👏@Mastercardindia Milestones 🏏#NZvPAK pic.twitter.com/u1PK5bOVTj
— ICC (@ICC) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rachin Ravindra continues his brilliant #CWC23 with another century 👏@Mastercardindia Milestones 🏏#NZvPAK pic.twitter.com/u1PK5bOVTj
— ICC (@ICC) November 4, 2023Rachin Ravindra continues his brilliant #CWC23 with another century 👏@Mastercardindia Milestones 🏏#NZvPAK pic.twitter.com/u1PK5bOVTj
— ICC (@ICC) November 4, 2023
அதன்பின் காயத்திலிருந்து மீண்டு வந்து களத்திற்குத் திரும்பிய கேன் வில்லியம்சன் - ரச்சினுடன் கைகோர்த்தார். இந்த கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தது. ஓவருக்கு 6, 7 ரன்கள் என மளமளவென ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ரச்சின் ஒரு கட்டத்தில் முகமது வாசிம் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து 108 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுபக்கம் அணியின் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தன.
இறுதியில் கிளென் பிலிப்பிஸ் ரன்கள் சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 401 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரரான அப்துல்லா ஷபீக் 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ஃபகார் ஜமானுடன், பாபர் அசாம் சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர்.
-
🏏 Match Summary 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A stunning ton from @FakharZamanLive and a calm knock from @babarazam258 as we earn a crucial win 👏#NZvPAK | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/eStwvvyUta
">🏏 Match Summary 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2023
A stunning ton from @FakharZamanLive and a calm knock from @babarazam258 as we earn a crucial win 👏#NZvPAK | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/eStwvvyUta🏏 Match Summary 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2023
A stunning ton from @FakharZamanLive and a calm knock from @babarazam258 as we earn a crucial win 👏#NZvPAK | #CWC23 | #DattKePakistani pic.twitter.com/eStwvvyUta
இருவரும் அரைசதத்தைக் கடந்த நிலையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஃபகார் ஜமான் சதம் விளாசினார். ஆனால் ஆட்டத்தின் போது மழை தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட மாற்று வீரர்!