பெங்களூரு: 13வது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 45வது லீக் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று (நவ.12) நடைபெற்ற இப்போட்டியில், 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் சென்றுள்ளது. மேலும் நேற்றை (நவ.12) போட்டியில் இந்திய அணி வீரரகள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர்.
- நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளைச் சந்தித்த ரோகித் சர்மா 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 61 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் 100 அரைசசத்தை பூர்த்தி செய்ததுடன், ஓப்பனராக களமிறங்கி 14,000 ரன்களைக் கடந்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
- அதே போல் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 24 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், கேப்டனாக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 22 சிக்ஸர்கள் விளாசிய மோர்கன் 2வது இடத்தில் உள்ளார்.
- மற்றொரு ஓப்பனராக களமிறங்கிய ஷுப்மன் கில், நேற்றைய போட்டியில் 51 ரன்கள் விளாசினர். இதன் காரணமாக நடப்பாண்டில் 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார், சுப்மன் கில்.
- நேற்றைய போட்டியில் 51 ரன்கள் அடித்ததன் மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார், விராட் கோலி (594 ரன்கள்).
- நேற்றைய போட்டியில் 94 பந்துகளை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 128 ரன்கள் விளாசினர். உலகக் கோப்பையில் அவரின் முதல் சதம் இதுவாகும்.
- உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார், கே.எல் ராகுல். 62 பந்துகளில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விராட் கோலி பந்து வீசினார். தான் வீசிய 3வது பந்திலேயே நெதர்லாந்து கேப்டன் ஸ்கார்ட் எட்வஸின் விக்கெட்டை வீழ்த்தினார், விராட் கோலி. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
- நேற்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுலைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் பந்து வீசினார்கள். உலகக் கோப்பை தொடரில் 9 பவுலர்களைப் பயன்படுத்தும் 3வது நிகழ்வு இதுவாகும்.
- அதேபோல் 3,980 நாட்களுக்குப் பிறகு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதையும் படிங்க: தொடர்ந்து 9 வெற்றிகள்.. சாத்தியத்தின் பின்னணி குறித்து மனம் திறந்த கேப்டன் ரோகித் சர்மா!