லக்னோ: நடப்பாண்டு ஐசிசி உலக கோப்பையில் ஒரு அசாதாரண வெற்றியுடன் தென்னாப்பிரிக்கா அணி தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இலங்கையை 102 ரன்கள் வித்தியாசத்திலும், இராண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 134 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று 4 புள்ளிகள் பெற்று +2.360 நெட் ரன் ரேட்டுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
குறிப்பாக தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஜிசோ ரபாடா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் முக்கிய 3 வீரர்களை வீழ்த்தி அசத்தினார். அவர் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய இரு போட்டிகள் 5 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார்.
இது குறித்து நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு கூறியதாவது; "நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம். விளையாடிய இரு போட்டிகளிலுமே வென்றுள்ளோம். அதனையே அடுத்த போட்டியிலும் செய்ய விரும்புகிறோம். எங்கள் அணியில் உள்ள பலவினத்தைக் கண்டறிந்து அதை சரி செய்ய முனைகிறோம். அதனால் நாங்கள் வர இருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளோம். ஒவ்வொரு ஆட்டத்தைக் கடந்து வருகையிலும், எதையேனும் முன்னேற்றி கொள்ள வேண்டியவை இருக்கும். அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம்.
தொடர்ந்து பேசிய அவர் ஸ்டீவ் ஸ்மித்தின் அவுட் பற்றி கூறினார், என் கோணத்திலும் இருந்தும் சரி, டி காக் கோணத்திலும் இருந்தும் சரி, பந்து ஸ்டெம்பை தாக்கியது போல் உணர்ந்தோம். அதனாலேயே நாங்கள் ரிவ்யூவுக்கு சென்றோம். அது எங்களுக்குச் சாதகமாகவே அமைந்தது. ஸ்மித் நிலைத்து நின்றால் நிச்சியமாக ரன்களை சேர்பார். எனவே அவர் விக்கெட் மிகவும் முக்கியம். அதனால் முன்கூடியே அவரை வீழ்த்த வேண்டும் என நாங்கள் நினைத்தோம் என்றார்.
அதே போல் ஸ்டோனிஸ் அவுட் பற்றிப் பேசுகையில், முதலில் பந்து அவரது பேடில் பட்டு இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், எனது அணியின் சக வீரர்கள் உறுதியாக இருந்தனர். பந்து பேட்டில் பட்டதாகச் சத்தம் கேட்டது என கூறினர். அதன் பின் ரிவ்யூவுக்கு சென்றோம், ஆனால் பந்து அவரது கையுறையில் பட்டுள்ளது. மேலும், அவரது கை பேட்டில் பட்டிருந்ததால் அவுட் என முடிவு செய்யப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: NZ VS BAN: நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை.. காத்து வாங்கும் சேப்பாக்கம் மைதான இருக்கைகள்!