டெல்லி: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதிக் கட்டதை எட்டியுள்ளது. இறுதிப் போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை 38வது லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. வங்கதேச அணி பவுலர்கள் ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இலங்கைக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசங்கா, பெரேரா ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இஸ்லாம் பந்தில் குசல் பெரேரா 4 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 19 ரன்களுக்கு அவுட்டானார். சற்று நிலைத்து நின்று ஆடிய நிசங்கா 41 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமாவும் சகிப் அல் ஹசன் பந்தில் அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய மேத்யூஸ் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் சர்ச்சைக்குரிய timed out முறையில் அவுட்டானார். இந்த விவகாரம் இலங்கை வீரர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் அசலங்கா நிலைத்து நின்று ஆடி சதம் (108) அடித்தார். அடுத்து களமிறங்கிய டி சில்வா(34), திக்ஷனா(22) ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்க்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 279 ரன்கள் எடுத்தது. போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தன்சித் ஹசன் மதுஷங்கா பந்தில் 90 ரன்களுக்கு அவுட்டானார். சற்று அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் 23 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய சண்டோ, சகிப் அல் ஹசன் ஜோடி பொறுமையாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. 82 ரன்கள் எடுத்த சகிப், மேத்யூஸ் பந்தில் அவுட்டானார். அதே ஓவரில் மேத்யூஸ் பந்தில் சண்டோ 90 ரன்களுக்கு போல்டானார்.
அடுத்து களமிறங்கிய மெகமதுல்லா (22), ரகிம் (10) ஜோடி சற்று நேரத்தில் அவுட்டானது. ஆனால் இவர்கள் இருவரும் ரன்ரேட் குறையாமல் பார்த்து கொண்டனர். பின்னர் களமிறங்கிய ஹிருதாய் அதிரடியாக ஆடினார். இறுதி வரை போராடிய இலங்கை அணி மிராஸ் விக்கெட்டை வீழ்த்தியது. கடைசியாக வங்கதேச அணி 41 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் அதிகபட்சமாக மதுஷங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான ஆட்டம்.. மற்ற அணிகளுக்கு முன்னொடி.. ரோகித் சர்மா குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் ஜக்தலே கருத்து!