ETV Bharat / sports

BAN Vs AUS: அதிரடியாக ஆடும் மிட்செல் மார்ஸ்.. விக்கெட் வீழ்த்த போராடும் வங்கதேசம்! - ODI உலகக் கோப்பை 2023

World Cup Cricket 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 306 ரன்களை குவித்து வங்கதேச அணி அசத்தியுள்ளது.

australia-vs-bangladesh-cricket-update-news

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 2:23 PM IST

Updated : Nov 11, 2023, 5:11 PM IST

புனே: 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பையின் 43 லீக் ஆட்டத்தில் புள்ளிபட்டியளில் 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி, 8வது இடத்தில் உள்ள வங்கதேசம் அணியுடன் மோதுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன் படி லிட்டன் தாஸ் - தன்சித் ஹசன் வங்க தேச அணியின் ஓப்பனராக களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 5 ஓவர்கள் முடிவில் 20 ரன்கள் எடுத்தது. பின்னர் அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். இந்நிலையில், தன்சித் ஹசன் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 106ஆக் இருந்த போது நீண்ட நேரம் நிலைத்திருந்த லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார்.

சீராக விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தாலும் அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் அணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கத் தவறவில்லை. இதனால் வங்கதேசத்தின் ரன்னும் சீராக உயர்ந்தது. டவ்ஹித் ஹ்ரிடோய் 79 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் சேர்த்துள்ளது.

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக போட்டியின் 2.5 ஒவரின் போது டாஸ்கின் அகமது வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டேவிட் வார்னட்- மிட்செல் மார்ஸ் கூட்டணி அதிரடியாக விளையாடி 17 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

மிட்செல் மார்ஸ்-100:களத்தில் இறங்கியது முதலே அபராமாக ஆடி வந்த மிட்செல் மார்ஸ் 87 பந்துகளில் 11 பவுண்டரிகள் , 4 சிக்ஸர்கள் என 100 ரன்களுடன் விளையாடி வருகின்றார்.

அதே போல், உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை இடைநீக்கம் செய்தது ஐசிசி!

Last Updated : Nov 11, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.