ETV Bharat / sports

ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை! - உலகக்கோப்பை கிரிக்கெட் 2023

ICC World cup trophy: உலகின் மதிப்பு மிகுந்த கோப்பைகளில் ஒன்றாக கருதப்படும் ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிராபி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்டது. ராமோஜி பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர் Ch.விஜயேஸ்வரி, அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் உலக கோப்பை அறிமுகப்படுத்தினார்.

ராமோஜி பிலிம் சிட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 2:29 PM IST

Updated : Sep 20, 2023, 8:55 PM IST

ஐதராபாத்: ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கேரம் கார்டனில் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.

ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் Ch.விஜயேஸ்வரி மற்றும் ஈநாடு நிர்வாக இயக்குநர் ஷஹரி ஆகியோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தினார். கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் ஈ.நாடு இயக்குநர் Ch.கிரண், ஈநாடு மற்றும் ஈடிவி தலைமைச் செயல் அதிகாரி பாபிநீடு உள்ளிட்டோர் சிறப்பித்தனர்.

உலகக்கோப்பையை யார் தொடமுடியும்? ஐசிசியின் மதிப்பு வாய்ந்த இந்த டிராபியை தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்கள் மட்டுமே தொடவோ, தூக்கி புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கப்படுவார்கள். இதன்படி ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர்கள் மற்றும் தற்போதைய ஐசிசி உலகக்கோப்பை தொடர் மற்றும் தகுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள சர்வதேச வீரர்கள் மட்டுமே கோப்பையை தொட அனுமதிக்கப்படுவார்கள்.

உண்மையான கோப்பை யாருக்கு கிடைக்கும்? இதற்கான பதில் யாருக்குமே இல்லை என்பது தான். ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை டிராபி என்பது உலக கிரிக்கெட்டுக்கான பொக்கிஷம். இது முழுவதும் ஐசிசிக்கு சொந்தமானது. ஒவ்வொரு சீசனின் போதும் வெற்றியாளர்களின் கையில் இந்த கோப்பையின் நகல் மட்டுமே வழங்கப்படும். அதே நேரத்தில் அசல் கோப்பையில் வெற்றியாளர்களின் பெயர் பொறிக்கப்படும்.

உலகக் கோப்பை எப்படி இருக்கும்? உலகக்கோப்பை டிராபியானது லண்டனில் உள்ள கார்ராடு ஜுவல்லர்ஸ் (Garrard) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. 60 செண்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த டிராபியானது வெள்ளியால் வடிவமைக்கப்பட்டிருக்கும். மூன்று வெள்ளி தூண்களாளின் உச்சியில் தங்க உருளை இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தங்க உருளையானது கிரிக்கெட் பந்தினை குறிக்கும் வகையில் உள்ளது. மாறாக வெள்ளித் தூண்கள் ஸ்டம்ப்கள் மற்றும பெயில்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய அம்சங்களான பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கை குறிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும்.

உலகக்கோப்பையின் விலை மதிப்பு என்ன? தற்போதைய நிலவரப்படி 40 ஆயிரம் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பின்படி, சுமார் 31 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த கோப்பை 11 கிலோ எடை உடையது. எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், இந்த கோப்பையின் தனித்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில், பிளாட்டோனிக் டைமன்ஷன் என்ற வடிவமைப்பு அடிப்படையில் இந்த கோப்பை உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைக்கப்பட்டது எப்போது? தற்போதைய டிராபியின் வடிவமைப்பு , 1999ம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது. இதன் கீழ்ப்புறத்தில் உலகக்கோப்பையின் முந்தைய வெற்றியாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் நகல்கள் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது எப்படி? உலகக்கோப்பை அறிமுகவிழாவை தனித்துவமாக்கும் வகையில், விண்வெளியில் ஸ்ட்ரேடோஸ்பியர் (stratosphere) எனும் அடுக்கில் அறிமுக விழாவை நடத்தியது ஐசிசி. அதாவது புவியிலிருந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. புவியின் வளிமண்டலத்திற்கு மேலேயிருந்து பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு இந்த கோப்பை கொண்டு வரப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இது வரை கோப்பையின் பயணம்: தனித்துவமான அறிமுகவிழாவுக்குப் பின்னர், இந்த உலகக்கோப்பையானது இது வரையிலும் 18 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது. குவைத், பஹரைன் மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பின்னர் தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ஜூன் 27ம் தேதி பயணத்தை துவக்கிய இந்த டிராபி செப்டம்பர் 4ம் தேதி மீண்டும் இந்தியா வந்தடைந்தது.

Last Updated : Sep 20, 2023, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.